அருமையான கொத்துக்கறி புட்டு செய்வது எப்படி?





அருமையான கொத்துக்கறி புட்டு செய்வது எப்படி?

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் இறைச்சி பிரியர்கள் தான். ஆடு, கோழி, காடை, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவற்றையும், மீன், நண்டு, இறால் போன்ற கடல்சார் உணவுகளையும் விரும்பி சாப்பிடுகின்றனர். 
அருமையான கொத்துக்கறி புட்டு செய்வது எப்படி?
இறைச்சி உணவுகளில் அதிகமான சத்து கிடைக்கிறது, அதிக சுவை கொண்டது என்று சாப்பிடுகின்றனர். எப்படியும் சராசரியாக வாரத்திற்கு ஒருமுறையாவது இறைச்சி சாப்பிடும் பழக்கம் இன்றைக்கு இருக்கிறது. 

விரதத்தின் காரணமாக அல்லது வாய்ப்பு இல்லாத காரணத்தால் ஒன்றிரண்டு வாரங்கள் நாம் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்கிறோம். 
ஒரு வேளை ஒரு மாதத்திற்கு நீங்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்து விட்டால் என்ன நடக்கும்? உங்கள் செரிமானம் சீரடைந்து இருப்பதையும், ஏராளமான அற்றல் கிடைப்பதையும் நீங்கள் உணர முடியும் அல்லது வழக்கத்தை விட நீங்கள் சோர்வடைந்து காணப்படுவீர்கள். 

இது உங்கள் உடல் அமைப்பை பொறுத்து மாறுபடும். இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் எரிகா இன்கிராம் கூறுகையில், இறைச்சிக்கு மாற்றாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில், அதற்கு ஈடான ஊட்டச்சத்துக்கள் இல்லை என்றால் நீங்கள் சோர்வடையக் கூடும். 

புரதச்சத்து நிறைந்த பீன்ஸ், நட்ஸ், சோயா, முட்டை, முழு தானியங்கள் போன்றவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். தசைகளை கட்டமைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் புரதச்சத்து அவசியமானது. 

அதே போல, உடலெங்கிலும் அணுக்களை கொண்டு செல்வதற்கும் புரதச்சத்து தேவை. நீங்கள் உண்ணும் உணவில் உங்கள் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் கிடைக்கவில்லை என்றால், உடல் சுறுசுறுப்பாக இயங்காது’’ என்று கூறினார்.

சிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா? 

தேவையானவை . : 

கொத்துக்கறி (கைமா) - 200 கிராம் 

வெங்காயம் - 100 கிராம் 

இஞ்சி - 15 கிராம் 

பூண்டு - 10 பல் 

நெய் - 20 கிராம் 

மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன் 

முட்டை - 2 

பட்டை - 2 

கிராம்பு - 2 

ஏலக்காய்- 2 

முந்திரிப் பருப்பு - 6 

கறிவேப்பிலை, கொத்த மல்லி இலை - சிறிதளவு 

காய்ந்த மிளகாய் - 3 

மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன் 

உப்பு - சிறிதளவு 

செய்முறை . :

கொத்துக்கறி புட்டு
கைமாவை வேக வைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த் தூள் போட்டு வேக வைக்கவும். 

கைமா வெந்து நீர் வற்றியதும், மிக்சியில் கரகரப்பாக அரைக்கவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி மசாலா சாமான்களை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், அரைத்து வைத்த கறியைச் சேர்த்துக் கிளறவும். 

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !

முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறி உப்பு சரி பார்க்கவும். கொத்த மல்லி இலை, வறுத்த முந்திரி தூவி அலங்கரிக்கவும். 

குறிப்பு 

கைமா விற்குப் பதிலாக கூனி மீனிலும் புட்டு செய்யலாம்.
Tags: