அருமையான வெண் பொங்கல் செய்வது எப்படி?





அருமையான வெண் பொங்கல் செய்வது எப்படி?

பச்சரிசி சாப்பிட்டால் உடல் சதைப் பிடிப்பு ஏற்படும் என்று கூறுவார்கள். எனவே, உடல் மெலிந்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். பச்சரிசியை சாப்பிட்டால் உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகும். 
வெண் பொங்கல் செய்முறை
உடல் மெலிந்து கொழுப்புச் சத்தே இல்லாமல் பலவீனமாகக் காணப்படுபவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிடலாம். வெண் பொங்கல் என்பது தென்னிந்திய பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். 

தொடை, பிட்டம், மார்பு போன்ற இடங்களில் கோடு வர காரணம்?

தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான சமச்சீரான சத்துகள் நிறைந்த இந்த காலை உணவானது பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. சரி இனி பச்சரிசி பயன்படுத்தி அருமையான வெண் பொங்கல் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 2 கப்

பாசி பருப்பு – 3/4 கப்

மிளகு – 2 டீஸ்பூன்

கருவேப்பிலை – ஒரு கைப்பிடி

நெய் - 4 டீஸ்பூன்

சீரகம் 3 டீஸ்பூன்

இஞ்சி – ஒரு துண்டு

பெருங்காய தூள் – 4 சிட்டிகை

முந்திரி பருப்பு - தேவைக்கேற்ப

உப்பு – தேவைக்கேற்ப

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் தேவையான அளவு பச்சரிசியை எடுத்து நன்றாக அலசி 20 நிமிடங்களுக்கு தண்ணீர் சேர்த்து ஊற வைத்து கொள்ள வேண்டும். 

அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 6 கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து அதில் ஊற வைத்த பச்சரிசி மற்றும் பாசி பருப்பை சேர்த்து கொள்ளவும்.

பிறகு அதில் 2 டீஸ்பூன் சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் 40 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
பொங்கல் வெந்தவுடன் அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும் 4 டீஸ்பூன் நெய் ஊற்றி அதில் மிளகு மற்றும் சிறு துண்டுகளாக நறுக்கிய இஞ்சியை சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்ததாக அதனுடன் சீரகம், பெருங்காயத்தூள், முந்திரி ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அனைத்தையும் நன்கு பொன்னிறமாக வறுத்தவுடன் இறுதியாக கருவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.

கருவேப்பிலை நன்கு பொறிந்ததும் அவற்றை அப்படியே பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறி விடவும். அவ்வளவு தான் சுவையான கருவேப்பிலை மிளகு பொங்கல் பரிமாற தயார்…
Tags: