மாட்டுக் கறியில் எல்லா விதமான ஊட்ட சத்துக்களும் அதிகமாக உள்ளது. அதிக அளவு சத்துக்களை இருந்தாலும் குறைந்த அளவு கலோரிகள் தான் நமக்கு கிடைக்கின்றது.
100 கிராம் மாட்டிறைச்சியில் 254 கலோரிகள் தான் உள்ளன. மாட்டிறைச்சியை தினமும் உண்பதால் நமது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும்.
மாட்டிறைச்சியில் வைட்டமின் B12 என்பது 37% சேர்ந்துள்ளது . மேலும் மனநோய்களை குணமாக்கவும் வயோதிப தன்மை மற்றும் மலட்டுத் தன்மையை குறைக்கவும் வைட்டமின் B12 முக்கியமாகும்.
வைட்டமின் B12 சிவப்புநிற இறைச்சிகளில் அதிகம் உள்ளது. சரி இனி மாட்டிறைச்சி கொண்டு ருசியான பீஃப் 65 செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் ;
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் ஸ்பூன்
சிறிய வெங்காயம் - 1
சிறிய தக்காளி - 1
மல்லி இலை - சிறிது
தயிர் - 1 டீஸ்பூன்
கார்ன் ப்ளோர் - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
ரெட் கலர் - பின்ச்
உப்பு- எண்ணெய் - தேவைக்கு
தண்டுவடம் பாதித்தால் என்ன நடக்கும்?செய்முறை :
சுத்தம் செய்து சிறிய துண்டுகள் போட்ட கறியை நன்கு அலசி தண்ணீர் வடிகட்ட வேண்டும்.
பின்பு அதனை குக்கரில் எடுத்து, அத்துடன், தயிர், உப்பு, மிளகாய்த் தூள், இஞ்சி பூண்டு, கரம் மசாலா,பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மல்லி இலை சேர்த்து கலந்து 5 விசில் வைத்து இறக்கவும்.
தண்ணீரே சேர்க்க கூடாது. தண்ணீர் ஊறி இருந்தால் வற்ற வைக்கவும்.
வெந்த கறியை குறிப்பிட்ட அளவு கார்ன் ஃப்ளோர், கடலை மாவு, அரிசி மாவோடு, பின்ச் ரெட் கலர் சேர்த்து கொஞ்சம் கறியில் ஊறி இருக்கும் தண்ணீரை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் தேவைக்கு எடுத்து காய்ந்ததும் கறியை போட்டு முறுக பொரித்து எடுக்கவும். அரிசி மாவு, கடலை மாவு சேர்ப்ப தால் ருசியாக எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.
பேப்பர் டவலில் வைத்து எடுத்து பரிமாறவும். அலங்கரிக்க கொடை மிளகாய் அல்லது பச்சை மிளகாய் கீறி விதை நீக்கி ஒரு ஸ்பூன் எண்ணெயில் வறுத்து போடலாம்.
இன்னொரு முறையாக கறியை வெந்த பின்பு, அதனை ஒரு கடாயில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கருவேப்பிலை, மிளகாய் வற்றல் கிள்ளி போட்டும் வறுத்தும் பரிமாறலாம்.
இது தயிர் சாதத்திற்கு அருமையாக இருக்கும். சுவையான பீஃப் 65 ரெடி. இப்படி அலங்கரித்து பரிமாறும் பொழுது அருமையாக இருக்கும்.
இது வெளிப்புறம் கிரிஸ்பியாகவும், உள்ளே சாஃப்டாகவும், அசத்தலான சுவையுடன் இருக்கும்.கறி வெந்த மசாலாவை போட்டு கலந்து பொரிப்பதில் தான் டேஸ்ட் வரும்.