சுவையான சிக்கன் நக்கெட்ஸ் செய்வது எப்படி?





சுவையான சிக்கன் நக்கெட்ஸ் செய்வது எப்படி?

அசைவ உணவு வகைகளில் ஒன்றான சிக்கன் வைத்து செய்யப்படும் அனைத்து உணவுகளுக்கும் ஒரு கூட்டமே அடிமையாக இருக்கும். 
சுவையான சிக்கன் நக்கெட்ஸ் செய்வது எப்படி?
சில்லி சிக்கன், சிக்கன் 65, பட்டர் சிக்கன், சிக்கன் கிரேவி, சிக்கன் தந்தூரி என்று எதை செய்து கொடுத்தாலும் அடுத்த நிமிடமே காலி ஆகி விடும். அந்த வகையில் சிக்கன் ரெசிபிகளில் ஒன்றான சிக்கன் நக்கெட்ஸ் ரெசிபியை இன்று நாம் காண உள்ளோம். 

இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் என்றாலும் குறிப்பாக குழந்தைகள் மிகவும் பிடித்து சாப்பிடக் கூடிய ஒரு உணவு என்றும் கூறலாம். 

வழக்கமாக நம்மில் அதிகமானோர் இந்த சிக்கன் நக்கெட்ஸ் துரித உணவகங்கள் அல்லது ரெஸ்டாரண்ட்களில் சென்று தான் சுவைத்து சாப்பிட்டு இருப்போம். 
ஆனால் இன்று அதனை நமது வீட்டிலேயே சுவையாகவும் எளிமையாகவும் செய்யலாம். இதனை ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் என பல வகையான உணவுகளுக்கு சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். 

சிலர் இதனை மட்டுமே மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவார்கள். வாருங்கள்! மொறுமொறுவான சிக்கன் நக்கெட்ஸ் வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானவை:

மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிது

உப்பு - தேவைக்கு

மைதா - 2 டீஸ்பூன்

முட்டை - 1

ப்ரெட் க்ரம்ஸ் (bread crumbs) - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - பொரிக்க‌

செய்முறை:
சுவையான சிக்கன் நக்கெட்ஸ் செய்வது எப்படி?
சிக்கனை சுத்தம் செய்து விட்டு மிகவும் மெல்லியத் துண்டுகளாகப் போடவும். ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சிக்கன் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி விட்டு மூடி மிதமானத் தீயில் வேக வைக்கவும். தண்ணீர் ஊற்ற வேண்டாம். 

சிக்கனில் உள்ள தண்ணீரிலேயே வெந்து விடும். அடிப்பிடிக் காமல் சிக்கன் துண்டு களை இரண்டு அல்லது மூன்று முறை திருப்பி விட்டு வேக வைக்கவும்.

தண்ணீர் முழுவதும் சுண்டி, சிக்கன் வெந்ததும் இறக்கி ஆற வைக்கவும். மைதா, ப்ரெட் தூள் இரண்டையும் தனித்தனி கிண்ணங்களில் எடுத்துக் கொள்ளவும்.

முட்டையைத் தனியாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி அடித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு சிக்கன் துண்டை எடுத்து மைதாவில் முழுவதும் புரட்டி, அடுத்து முட்டையில் முழுவதும் தோய்த்து, உடனே ப்ரெட் தூளில் போட்டு புரட்டி ஒரு தட்டில் வைக்கவும். 

இது போல் எல்லா சிக்கன் துண்டுகளையும் செய்து வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ஒவ்வொன்றாகவோ அல்லது 
எண்ணெய் கொண்ட மட்டுமோ போட்டு ஒரு பக்கம் வெந்து சிவந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு வெந்ததும் எடுத்து விடவும். இதனை ketchup உடனோ அல்லது Ranch உடனோ சாப்பிட சுவையாக இருக்கும்.
Tags: