ருசியான சிக்கன் டிக்கா பார்பிக்கியூ செய்வது எப்படி?





ருசியான சிக்கன் டிக்கா பார்பிக்கியூ செய்வது எப்படி?

பார்பிக்கியூ என்பது கரி மற்றும் மரத் துண்டுகளைக் கொண்டு மாமிசங்களை நேரடியாக நெருப்பு, வெப்ப அனல் மற்றும் புகைச்சலைக் கொண்டு சமைக்கப்படும் சமையல் முறையாகும்.
ருசியான சிக்கன் டிக்கா பார்பிகியு செய்வது எப்படி?

இப்பொழுது உலகெங்கும் பரவி அந்த நாட்டிற்கு தகுந்தார் போல் சமையல் முறையில் ஒரு சில மாற்றங்களை கண்டுள்ளது.

பார்பிக்கியூ சமையல் நுட்பங்களில் புகைத்தல், வறுத்தல் அல்லது பேக்கிங், பிரேசிங் மற்றும் கிரில்லிங் ஆகியவை அடங்கும். 

இவைகள் அனைத்தும் நேரத்தைப் பொருத்து மாறும். இதில் புகைத்தல் (smoking) என்பது அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் சமையல் முறையாகும்.

ஒரு கட்டுப் படுத்தப்பட்ட வெப்பநிலையின் கீழ் மூடப்பட்ட அறையில் மரம் அல்லது நிலக்கரியிலிருந்து உருவாகும் நெருப்பை பயன்படுத்தி இறைச்சியைப் சமைக்கப் பயன்படுத்தப்படும் பழமையான நுட்பங்களில் ஒன்று பார்பிக்கியூ (barbequed).

பார்பிக்யூ உணவகங்களுக்குச் சென்று சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவு வகைகளை ரசித்து உண்பெதென்பது தற்போது ஃபேஷனாகி வருகிறது. 

இறைச்சி அல்லது கடல் உணவு வகைகளை லேசான வேக்காட்டில் வேக வைத்து எடுத்துக் கொண்டு அதில் மசாலா தடவி குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுவார்கள். 

பின்னர் வாடிக்கையாளர்கள் வந்து கேட்கும் போது கிரில் அடுப்பில் வைத்து மீண்டும் சுட்டு பரிமாறுவார்கள். 

உயரம் குறைவான பெண்ணுக்கு குறைப் பிரசவமா?
தேவையான பொருட்கள் :..

சிக்கன் - 1 கிலோ

(ஷான்) சிக்கன் டிக்கா அல்லது பார்பிகியு மசாலா - 2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

கெட்டி தயிர் - 100 மில்லி அல்லது 150 மில்லி

கசூரி மேத்தி - 2 டேபிள் ஸ்பூன்

ஆலிவ் ஆயில்- 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - சிறிது

செய்முறை :..
ருசியான சிக்கன் டிக்கா பார்பிகியு செய்வது எப்படி?
சுத்தம் செய்து கட் செய்த சிக்கன், மசாலா, இஞ்சி பூண்டு, தயிர், சிறிது சுவைக்கு உப்பு, ஆலிவ் ஆயில் சேர்த்து பிரட்டி கசூரி மேத்தி பவுடர் சேர்த்து குறைந்தது 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

பார்பிக்கியூ அடுப்பு ரெடியானவுடன் கம்பியில் அடுக்கியோ அல்லது கம்பி தட்டில் வைத்தோ இரு புறமும் சிவற வெந்து மணம் வர சுட்டு எடுக்கவும்.
சுவையான சிக்கன் டிக்கா பார்பிக்கியூ ரெடி.விரும்பினால் லைம் பிழிந்து சாப்பிடலாம். இதனை வெஜிடபிள் சாலட் டுடன் பரிமாற வும்.

குபூஸ், ஹமூஸ், முத்தபல், கார்லிக் பேஸ்ட் உடனும் சாப்பிடவும் சுவை அருமையாக இருக்கும். செய்து ஃப்ரிட்ஜில் ஊற வைத்தால் மறு நாள் செய்யும் பொழுது ருசி அருமையாக சிக்கன் சாஃப்டாக இருக்கும்.
Tags: