ருசியான பூண்டு மீன் குழம்பு செய்வது எப்படி?





ருசியான பூண்டு மீன் குழம்பு செய்வது எப்படி?

மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. 
ருசியான பூண்டு மீன் குழம்பு செய்வது எப்படி?
சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். 

பொதுவாகவே சிறிய வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஏனெனில் இவை கடல்பாசியை அதிகமாக உண்டு வாழ்வதால் ஒமேகா 3 அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சால்மன் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைவாக இருக்கிறது. 
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் மீன் சாப்பிடுவதால் இதய நோய்கள் குணமாகும் என தெரிய வந்துள்ளது. 

சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என கூறப்படுகிறது, வாரத்திற்கு ஒருமுறையாவது உணவுடன் மீனை சேர்த்து கொள்வது நல்லது.
தேவையான பொருட்கள் ;

ஏதாவது ஆற்று மீன் அல்லது கடல் மீன் - அரை கிலோ.

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,

வெந்தயம் - 1 டீஸ்பூன்,

பெரிய வெங்காயம்- 2 அல்லது சின்ன வெங்காயம் -100 கிராம்,

பூண்டு - 50 அல்லது 75 கிராம் (சுவைக்கு ஏற்ப)

தக்காளி - 200 கிராம்,

மிளகாய் - 4,

மல்லி கருவேப் பிலை -சிறிது,

புளி - எலுமிச்சை அளவு,

மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்,

மிளகுத் தூள் - அரை ஸ்பூன்,
சீரகத் தூள் -அரை ஸ்பூன்,

மல்லித் தூள் - 3 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்,

உப்பு - தேவைக்கு. 
செய்முறை :

வெங்காயம், தக்காளி,பூண்டு நறுக்கி எடுத்து வைக்கவும், மீனையும் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

பூண்டு மீன் குழம்பு
ஒரு பெரிய மண் சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந் ததும், வெந்தயம் சேர்க்கவும். வெந்தயம் முழுதாக போட விரும்பா தவர்கள் வறுத்து பொடித்தும் போடலாம்.

பின்பு கருவே ப்பிலை, மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து சிவற வதக்கவும். தக்காளி சேர்க்கவும், உப்பு சேர்க்கவும், பிரட்டி விட்டு சிறிது நேரம் வைக்கவும், தக்காளி நன்கு மசிந்து விடும். 

மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்க்கவும். நன்கு வதக்கவும்.மசாலா வெந்து இப்படி தளதளன்னு வரும். புளித் தண்ணீர் சேர்த்து, நன்கு கொதி வந்ததும் மீனை போடவும்.

5 நிமிட த்தில் மீன் வெந்து விடும், சிம்மில் வைக்கவும், எண்ணெய் மேலே வரும். மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான பூண்டு மீன் குழம்பு ரெடி.
குறிப்பு :

தேங்காய் சேர்க்காமலே மீன் குழம்பு தூள் ஆக இருக்கும். மீனும், பூண்டும், மசாலாவும் சேர்ந்து வீடே மணக்கும். அதில் இருக்கும் பூண்டை சாததுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். 

விரும் பினால் குழம்பு கெட்டியாக இருக்க ஒரு டீஸ்பூன் அரிசி மாவு கரைத்து ஊற்றி சிம்மில் சிறிது நேரம் வைத்து இறக்கவும்.
Tags: