இன்றைய தலைமுறை உணவிலும் பழைமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதில் உள்ள ஊட்டச் சத்துக்களை அறியத் தொடங்கி யுள்ளது.
1950 களுக்கு முன்பு, பார்லி, பழுப்பு அரிசி, தினை மற்றும் கேழ்வரகு போன்ற முழு தானியங்கள் நம் பாரம்பரிய உணவில் பிரதானமாக இருந்தன.அதன் பிறகு அரிசி முழுமையான உணவாக மாறியது.
சுவையான தீபாவளி ஸ்பெஷல் பால்கோவா செய்வது எப்படி?
இப்போது மீண்டும் அரிசியை தவிர்த்து விட்டு முழு தானியம், தினை வகைகளுக்கு மாறுகின்றனர். அந்த வகையில் கேழ்வரகு உங்களுக்கு முழுமையான உணவாக இருக்கும்.
அதே சமயம் இது அனைத்து பருவநிலையிலும் விளையக் கூடிய, எளிதில் பயிடக்கூடிய உணவாகவும் உள்ளது. அதேசமயம் இதில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.
கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது. கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும்.
மேலும் இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது. கால்சியம் சத்து பெற கேழ்வரகு சிறந்த உணவு. பால் பொருட்களை விரும்பாதவர்களுக்கு கால்சியம் கிடைக்க கேழ்வரகை எடுத்துக் கொள்ளலாம்.
100 கிராம் கேழ்வரகில் 344 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. எனவே எலும்பு , பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க கேழ்வரகு சாப்பிடலாம்.
முதியவர்களுக்கும் எலும்பு தேய்மானம், மூட்டு வலி, எலும்பு புரை உள்ளவர்கள் அல்லது எதிர்காலத்தில் வராமல் இருக்க கேழ்வரகு சாப்பிடலாம்.
உடலுறவுக்குப் பிறகு ஆண் துணையை உயிரோடு சாப்பிடும் பெண் உயிரினம் !
தேவையானவை :
கேழ்வரகு மாவு - ஒரு கப்
பச்சரிசி - கால் கப்
நொய் - கால் கப்
தயிர் - அரை கப்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - ஒன்று அல்லது இரண்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதல் நாள் இரவே கேழ்வரகு மாவைத் தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் கட்டி யில்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் பச்சரிசி நொய்யை ஊற வையுங்கள்.
வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதித்ததும் ஊற வைத்த நொய்யைப் போட்டு வேக வையுங்கள். முக்கால் பதம் வெந்ததும் கரைத்து வைத் திருக்கும்
கேழ்வரகு மாவை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து அடி பிடிக்காமல் கிளறுங்கள். தீயைக் குறைத்து வைத்து வேக வையுங்கள். மாவு நன்றாக வெந்ததும் இறக்கி வையுங்கள்.
ஆறியதும் தயிர் ஊற்றிக் கரைத்து, அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துப் பரிமாறுங்கள். இதை முருங்கைக் கீரைப் பொரியலுடன் சாப்பிட, அமிர்தமாக இருக்கும்.