சுவையான வௌவால் மீன் வறுவல் செய்வது எப்படி?





சுவையான வௌவால் மீன் வறுவல் செய்வது எப்படி?

நம்முடைய உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும், உடலில் ரத்தம் உறையாமல் இருக்கவும், பெரிதும் உதவுவது இந்த ஒமேகா 3 அமிலம் தான். 
சுவையான வௌவால் மீன் வறுவல் செய்வது எப்படி?
முக்கியமாக, மூட்டு வலி, முழங்கால் வலியால் அவதிப் படுவோருக்கும் இந்த கொழுப்பு அமிலம் ஒரு சிறந்த நிவாரணியாக திகழ்கிறது. 

அந்த அளவுக்கு ஒமேகா 3 கொழுப்பு சத்துக்கள் அதிகம் உள்ள மீன்களில் வவ்வாலும் ஒன்று. வவ்வால் மீன்களில் 20-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கிறதாம். 

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பயன்கள் உண்டு என்றாலும், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரத சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிட்டத்தட்ட அனைத்து வகை வவ்வால் மீன்களிலுமே ஒரே மாதிரி கிடைக்கின்றன. 
வவ்வால் மீன்களில், குறைந்த அளவு எண்ணெய் உள்ளது. வைட்டமின் A, B1., D, B12 போன்றவை நிறைந்துள்ளன. கொழுப்பு அமிலங்கள் இதில் அதிகமுள்ளதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைகிறது. ரத்த அழுத்தத்தையும் குறைகிறது. ரத்தத்தில் இன்சுலின் அளவை சமநிலைப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் குறைக்கிறது. 

அந்த வகையில், நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த வவ்வால் மீன் நன்மை தரக்கூடியதே. சரி இனி வௌவால் மீன் பயன்படுத்தி சுவையான வௌவால் மீன் வறுவல் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையானவை

வௌவால் மீன் - 2


மிளகாய்த் தூள் - நான்கைந்து டீஸ்பூன்


மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்


உப்பு - தேவை யான அளவு


எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்


நல்லெண்ணெய்‍ - தேவைக்கு


செய்முறை:

சுவையான வௌவால் மீன் வறுவல் செய்வது எப்படி?
மீனை நன்றாக உப்பு போட்டு கழுவி நீரை வடிய வைக்கவும். நீர் வடிந்ததும் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு கலந்து காரம், உப்பு சரி பார்த்து சுமார் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி எண்ணெய் விட்டு மீன் துண்டங் களைப் போட்டு ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி விடவும்.
மீன் உடை யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மறுபுறம் வெந்ததும் தேவை யானால் மீண்டும் திருப்பி விட்டு வேக வைத்து எடுக்கவும்.

இது மீன் குழம்பு, ரசம், கிள்ளிப் போட்ட சாம்பார் போன்ற வற்றிற்கு நல்ல சுவையான பக்க உணவாகும்.
Tags: