சூப்பரான கீரைக் கூட்டு செய்வது எப்படி? #Koottu





சூப்பரான கீரைக் கூட்டு செய்வது எப்படி? #Koottu

உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் கொண்ட வெந்தயக் கீரையில் குளுக்கோஸ்யை கட்டுப்படுத்தகூடிய அளவிளான கிளைசெமிக் அளவும் உள்ளது. இதில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் எலும்பு பலவீனத்தைத் தடுக்கும். 
கீரைக் கூட்டு
உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளிர்ச்சித் தன்மை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம். 
வெந்தயக் கீரையை வேக வைத்து, வெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், பித்தத்தினால் வரும் மயக்கம் சரியாகும். இதிலுள்ள அதிகப்படியான இரும்புச்சத்து இரத்த சோகையை வராமல் தடுப்பதோடு உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. 

வெந்தயக்கீரை புதிதாக பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. பிரசவ வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. 

மேலும், வயிற்றில் ஏற்படும் அலர்ஜி, குடல் அலர்ஜி, குடல் அல்சர் போன்றவற்றை தடுப்பதோடு இரத்தத்தில் கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.

லெட்யூஸ் நீர்ச்சத்து நிறைந்த கீரை. கோடைக் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை சரிசெய்ய உதவுகிறது இந்தக் கீரை. இதை வாங்கி வந்ததும் சமையல் செய்து விடுவது நல்லது. 
இல்லை என்றால் வாடினால் அதன் நீர்ச்சத்து போய் விடும். குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதும் நல்லதில்லை.

பலாக்காய் கோலா உருண்டை செய்வது எப்படி?

தேவையானப் பொருள்கள்:

Bok choy கீரை - 2 (தண்டுடன்)

பச்சைப் பயறு (அ) கடலைப் பருப்பு - 1/2 கைப்பிடி

சின்ன வெங்காயம் - 2

பூண்டு - 2 பற்கள்

பச்சை மிளகாய் - 1

உப்பு - தேவைக்கு

அரைக்க:

சீரகம் - 1/4 டீஸ்பூன்

தேங்காய்ப் பூ - 1/2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய் - 1/2 டீஸ்பூன்

கடுகு

உளுந்து

சீரகம்

பெருங்காயம்

காய்ந்த மிளகாய்

கறிவேப்பிலை

செலரியை எப்படித் தேர்வு செய்து சமைப்பது?

செய்முறை:
பச்சைப் பருப்பை சிவக்க வறுத்து நன்றாகக் கழுவி விட்டு ஒரு கடாயில் அது வேகும் அளவு தண்ணீ விட்டு சிறிது மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும். கீரையைக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும். 

வெங்காயம், பூண்டு உரித்து நறுக்கி வைக்கவும். காரம் வேண்டாம் என்பவர்கள் பச்சை மிளாயை முழுதாகப் போட்டு வெந்ததும் தூக்கிப் போட்டு விடலாம்.

(காரம் விருப்ப மானால் தேங்காய், சீரகத்துடன் வைத்து அரைத்து சேர்க்க லாம்). பருப்பு முக்கால் பதம் வேகும் பொதே வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கீரை சேர்த்து சிறிது உப்பு போட்டு மூடி போடாமல் வேக விடவும்.

எல்லாம் நன்றாக வெந்ததும் தேங்காய், சீரகம் அரைத்து சேர்த்துக் கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும். ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து கீரையில் கொட்டி மூடவும்.

இதை சாதத்தில் பிசைந்தோ (அ) சாதத்திற்கு தொட்டுக் கொண்டோ சாப்பிடலாம். இதனை எல்லாக் கீரைகளிலும் செய்யலாம்.