ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்தானது ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது. அதாவது இது கெட்ட கொழுப்பினைக் குறைக்கச் செய்து உடல் எடையினை நிச்சயம் குறைக்கும்.
ப்ராக்கோலி கால்சியம் சத்தினை அதிகம் கொண்டதாக உள்ளதால், பல் மற்றும் எலும்பினை வலுவாக்குவதாகவும், பல் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் இருக்கின்றது.
ப்ராக்கோலி புற்றுநோய் பாதுகாப்பு காரணியாக உள்ளது, இதன் தன்மையானது புற்றுநோயினை வராமல் பாதுகாப்பதாகவும் உள்ளது. ப்ராக்கோலி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைப்பதாக உள்ளது.
ப்ரோக்கோலி வெண்டைக்காய் மற்றும் வல்லாரைக் கீரையினைப் போல் ஞாபக சக்தியினை அதிகரிப்பதாக உள்ளது.
இதனால் 8 மாதக் குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் இதனை வாரத்தில் 2 முறையாவது எடுத்துக் கொண்டால் நிச்சயம் ஞாபக சக்தியானது அதிகரிக்கும். எலும்புகள் வலிமையாக இருக்க வைட்டமின் கே சத்து அதிகம் தேவைப்படுகிறது.
இந்த வைட்டமின் கே சத்து இல்லாத உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு எதிர் காலங்களில் ஆஸ்டியோ போரோசிஸ் எனப்படும் எலும்புத் தேய்மானம், எலும்பு முறிவு போன்ற குறைபாடுகள் ஏற்பட காரணமாகிறது.
தேவையானவை:
ப்ரோக்கோலி பூ - ஒன்று
பச்சைப் பயறு - 1/2 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1/4 பகுதி
அரைக்க:
தேங்காய் பத்தை - 2
சீரகம் - சிறிது
அரிசிமாவு - 1/2 டீஸ்பூன்
பச்சைப் பயறு - 1/2 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1/4 பகுதி
அரைக்க:
தேங்காய் பத்தை - 2
சீரகம் - சிறிது
அரிசிமாவு - 1/2 டீஸ்பூன்
ஹரியாலி சமோசா செய்வது எப்படி?
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
ப்ரோக்கோலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தண்டு, இலைகளையும் தூக்கிப் போடாமல் சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
பச்சைப் பயறை சூடுவர வறுத்து, கழுவி விட்டு அது வேகுமளவு தண்ணீர் விட்டு, மஞ்சள் தூள், பெருங்காயம், இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.
பாதி வேகும் போதே வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து கிளறி விட்டு வேக விடவும். இவை எல்லாம் வெந்ததும் ப்ரோக்கோலியைச் சேர்த்துக் கிளறி விட்டு, சிறிது உப்பும் சேர்த்து கிண்டி விடவும்.
கேக் செய்ய பேக்கிங் ஓவன் தேவையில்லை குக்கரில் செய்வது எப்படி?
ப்ரோக்கோலி சீக்கிரமே வெந்து விடும். இரண்டு கொதி வந்தாலே போதும். தேங்காய், அரிசி மாவு, சீரகம் இவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து கொதிக்கும் கூட்டில் ஊற்றி மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவை களைத் தாளித்து ப்ரோக்கோலி கூட்டில் கொட்டிக் கிளறவும். இது சாதம், சப்பாத்தி இவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.