வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கும் கேப்சிகம் - குடைமிளகாய் உலகம் முழுவதும் பல்வேறு வகையான உணவுகளில் பயன்படுத்தப் படுகிறது.
இதில் கொழுப்பு குறைவாக இருப்பதால் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. பீட்டா - கிரிப்டோக்சாண்டின், ஜியாக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற கரோட்டினாய்டுகளின் சிறந்த ஆதாரங்களில் காய்கறி ஒன்றாகும்.
இது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களிலும் நிறைந்துள்ளது. சிவப்பு குடைமிளகாயில் உள்ள லைகோபீன் என்ற பைட்டோ நியூட்ரியன் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
குடை மிளகாயில் ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவற்றின் வளமான மூலமாகும், இது ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்கிறது. இதனால் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் இதில் உள்ளன. நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் கேப்சிகம் சாப்பிட வேண்டும்.
குறைந்த கொழுப்பு, கேப்சிகம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க ட்ரை கிளிசரைடுகளை குறைக்கிறது. குடைமிளகாயை சாப்பிட்டால் கொழுப்பை கரைத்து உடல் எடை குறையும்.
குடலின் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. சரி இனி சுவையான கேப்சிகம் – மின்ட் ரைஸ் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையானவை:
பாசுமதி அரிசி – ஒரு கப்,
குடமிளகாய் – 2,
வெங்காயம் – தலா ஒன்று,
தக்காளி – தலா ஒன்று,
புதினா, கொத்த மல்லித் தழை – தலா ஒரு கைப்பிடி அளவு,
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
பட்டை – சிறு துண்டு,
பெருஞ்சீரகம் – கால் டீஸ்பூன்,
எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.
யானைகளின் பிளிறலில் இருந்து அதன் வயதை கணக்கிடலாம்
செய்முறை:
வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். குடமிளகாயை சதுர சதுரமாக கட் செய்யவும். பாசுமதி அரிசியை உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, பெருஞ் சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி… இஞ்சி – பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறவும்.
முதலில் உடலுறவு கொண்டவை மீன்களே.. விஞ்ஞானிகள்
இதனுடன் நறுக்கிய குடமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். வடித்த சாதத்தில் இந்தக் கலவையை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.