கொண்டைக்கடலையில் பலவித ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. முடி, நகம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு புரோட்டீன் சத்து மிக முக்கியம்.
எனவே தினமும் 100 கிராம் கொண்டைக் கடலையினை உட்கொண்டு வரவது நல்லது. கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
100 கிராம் கொண்டைக் கடலையில் கிட்டத்தட்ட 19 கிராம் நார்சத்து நிறைந்துள்ளது. உடல் எடையினை குறைக்க நார்சத்து முக்கியம். தினமும் நார்சத்து உணவினை உண்டு வருபவர்களுக்கு மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.
கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
கொண்டைக் கடலையில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது. உங்கள் உணவுகளில் உள்ள கால்சியம் சத்தினை உரிய மெக்னீசியம் சாது மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது.
மேலும் உங்கள் எலும்பு மற்றும் பற்களின் வலிமையினை அதிகரிக்கின்றது. எனவே உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் தினமும் கொண்டைக் கடலையினை உட்கொண்டு வந்தால் நிறைய பயன் பெறலாம்.
கொண்டைக் கடலையில் நார்ச்சத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இவற்றை நீங்கள் தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் ஜீரண உறுப்புகள் மற்றும் குடலின் ஆரோக்கியம் மேம்படும்.
தேவையானப் பொருள்கள் :
கறுப்பு (அ) வெள்ளை கொண்டைக் கடலை - 3 கைப்பிடி (ஒரு நபருக்கு ஒரு பிடி)
கீரை - 3 கொத்து (mustard green)
(உங்கள் விருப்பம் போல் எந்தக் கீரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.)
சின்ன வெங்காயம் - 3
பூண்டு - 5 பற்கள்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஒல்லியாக இருக்க அடிக்கடி சாப்பிடலாம் !தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை :
முதல் நாள் இரவே கடலையை ஊற வைக்கவும். இப்பொழுது அதை நன்றாகக் கழுவி சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் நீரை வடித்து வைக்கவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் தோலுரித்துப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
கீரையைத் தண்ணீரில் அலசி நறுக்கி வைக்கவும். ஒரு வாணலி யில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி சீரகம், பெருஞ் சீரகம், பெருங் காயம் கறிவேப் பிலைத் தாளித்து பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இரண்டும் நன்றாக வதங்கி யதும் கடலையைப் போட்டு வதக்கவும். பிறகு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி லேசாகத் தண்ணிரைத் தெளித்து மூடி மிதமானத் தீயில் வைக்கவும்.
டெங்கு, சிக்குன் குனியா பயப்பட வேண்டாம்?
கொஞ்ச நேரத்தில் கடலையும் மிளகாய்த் தூளும் நன்றாகக் கலந்திருக்கும். அப்போது கீரையைப் போட்டுக் கிளறி மூடி போடாமல் சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
இது எல்லா சாதத்திற்கும் பக்க உணவாகப் பயன்படும்.மிகவும் சுவையாகவும் இருக்கும்.