தேவையானப் பொருள்கள்:
ரவை - 1 கப்
தேங்காய்ப் பூ - 2 கப்
சர்க்கரை - 2 கப்
முந்திரி - 10
நெய் - 1/4 கப்
ஏலக்காய் - 1
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
ரவை, தேங்காய்ப் பூ இவற்றை தனித் தனியாக ஒவ்வொரு ஸ்பூன் நெய்யில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
மேலும் சிறிது நெய் ஊற்றி முந்திரியை வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடிதுக் கொள்ளவும்.
ஒரு கெட்டி யான பாத்திர த்தில் தண்ணீர், சர்க்கரை எடுத்துக் கொண்டு அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும்.நல்ல கம்பிப்பதம் வர வேண்டும்.
(ஒரு கரண்டி யில் சிறிது பாகை எடுத்து இரண்டு விரல்களில் தொட்டு உருட்டி விரல் களைப் பிரித்தால் விரல்களுக் கிடையே கம்பி போன்று வர வேண்டும். இது தான் கம்பிப் பதம்.)
இப்போது ரவையை சிறிது சிறிதாக பாகில் கொட்டிக் கட்டி இல்லாமல் கிளற வேன்டும்.அடுத்து தேங்காய்ப் பூவை அதே போல் கொட்டிக் கிளறவும்.
தீ மிதமாக இருக்கட்டும். ஏலப் பொடியைத் தூவி இடை யிடையே நெய் ஊற்றிக் கிளறிக் கொண்டே இருக்கவும்.
கொஞ்ச நேரம் கழித்து கலவை பாத்திரத் தில் ஒட்டாமல் வரும். அது தான் சரியான பர்பி பதம்.
அப்போது கலவையை நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி பரப்பி விடவும். வறுத்த முந்திரியைத் தூவி அலங்கரித்து ஆற வைக்கவும்.
கொஞ்சம் ஆறியதும் ஒரு கத்தியால் சதுரமா கவோ (அ) டைமன்ட் வடிவத் திலோ துண்டுகள் போடவும்.
நன்றாக ஆறிய பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் (அ) பிளாஸ்டிக் கவரில் எடுத்து வைக்கவும்.
இப்போது மிகவும் சுவை யான, இனிப் பான, சாஃப்டான தேங்காய், ரவை பர்பி தயார்.