சுவையான சோம்பு கீரை வடை செய்வது எப்படி? #Vadai





சுவையான சோம்பு கீரை வடை செய்வது எப்படி? #Vadai

பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் சோம்புக்கீரை அல்லது சோம்புக்கீரை ஊறுகாய் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் இது ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளதா என்பதை அறிந்து உண்ண வேண்டும்.
சுவையான சோம்பு கீரை வடை செய்வது எப்படி?
சோம்புக்கீரை என்பது ஒரு கீரை வகையைச் சேர்ந்த தாவரமாகும். இதில் பல நன்மைகள் அமைந்து இருந்தாலும் அளவான முறையில் உண்ண வேண்டும். சோம்புக்கீரை என்பது முற்றிலும் தாவரத்தை சேர்ந்த மூலிகையாகும். 

பெரும்பாலும் நாம் கீரை வகைகளை சமையலறையில் மற்றும் மருத்துவ மூலிகையாக பயன்படுத்தி வருகிறோம். அதே போல் சோம்புக் கீரையிலும் மிகுந்த சுவை, வைட்டமீன்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளது.
கர்ப்ப காலத்தில் சோம்புக்கீரையை மிக குறைந்த அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும். மிக அதிக அளவில் சாப்பிடும் போது இது மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தும். 

மேலும் கர்ப்ப காலத்தில் உங்கள் கருவிற்கு ஆபத்தாக விளையும். சோம்பு ஊறுகாய் மற்றும் சோம்பு எண்ணெய்களை பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். 

மீறி நீங்கள் சோம்பு எண்ணெய்களை உபயோகிக்கும் போது இது உங்கள் உடலுக்கும் உங்கள் கருவிற்கும் தீங்காகக் கூடும். சோம்புக்கீரை விதைகள் மற்றும் இலைகள் சில மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது.
கர்ப்ப காலத்தில் சோம்புக் கீரையை உண்பதால் பாக்டீரியா தொடர்பான தொற்று நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. 

சோம்புக் கீரையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பாக்டீரியவுடன் தொடர்புயுடைய நோய்களை வராமல் தடுக்கிறது.

தேவையானவை:
 
கடலைப் பருப்பு - ஒரு கப்

வறுத்துப் பொடித்த ரோல்டு ஓட்ஸ் மாவு - ஒரு கப்

சோம்புக்கீரை - ஒரு செடியிலுள்ளது

சின்ன வெங்காயம் - சுமார் 10

இஞ்சி - சிறு துண்டு

பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் - 2

பெருஞ்சீரகம் - சிறிது 

பூண்டுப்பல் - 2

பெருங்காயம்

கறிவேப்பிலை & கொத்து மல்லி இலை

உப்பு - தேவைக்கு

கடலை எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
ஆண்மையை அதிகரிக்கும் பலாக்கொட்டை !
செய்முறை:
சோம்புக்கீரை வடை
தண்டிலிருந்து கீரையைத் தனியாகப் பிரித்தெடுத்து தண்ணீரில் அலசி வைக்கவும். பார்ப்பதற்கு சவுக்கு இலைகள் போலவே இருக்கிறது. தண்ணீர் வடிந்ததும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப் பருப்பை ஊற வைக்கவும்.

நன்றாக ஊறிய பிறகு கழுவி விட்டு, மிக்ஸியில் அல்லது கிரைண் டரில் போட்டு அதனுடன் மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, இஞ்சி சேர்த்து தண்ணீர் விடாமல் சற்று கொர கொரப்பாக, கெட்டியாக‌ அரைத் தெடுக்கவும்.
இந்த மாவுடன் ஓட்ஸ் மாவு, கீரை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை & கொத்து மல்லி சேர்த்து நன்றாகப் பிசைந்து இறுதியில் உப்பு சேர்த்துப் பிசையவும்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பி லேற்றி சூடானதும் மாவிலிருந்து சிறு உருண்டை அளவிற்கு எடுத்து உள்ளங்கையில் வைத்து  வடையாகத் தட்டி எண்ணெயில் போட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபுறம் வெந்து சிவந்ததும் எடுத்து விடவும். 
எண்ணெய் கொண்ட மட்டும் தட்டிப் போடலாம். இவ்வாறே எல்லா மாவையும் வடை களாகத் தட்டி எடுக்கவும். 

இப்போது கமகம, மொறுமொறு, சத்தான, சுவையான சோம்புக் கீரை வடைகள் தயார். தேங்காய் சட்னி அல்லது கெட்சப்புடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
Tags: