அதிகமான முட்டையை சாப்பிடுவதால் கொழுப்பின் அளவு அதிகரித்து இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். இரத்தத்தில் நிறைவுற்ற கொழுப்பு அதிகரித்து விடும்.
அவை உடலுக்கு கெட்ட கொழுப்பாக மாறி பல உடல் நல பாதிப்புகளை உண்டாக்கும். குறிப்பாக இதயம் தொடர்பான பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
எனவே முட்டையை அளவாக சாப்பிட்டு அதன் ஆரோக்கியத்தை முழுமையாக பெறுங்கள். நீரிழிவு நோயாளிகள், இதய நோயால் பாதிக்கப் பட்டவர்களாக இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு முட்டையே போதுமானது என பரிந்துரைக்கின்றனர்.
காரணம் முட்டை அதிக புரதச்சத்து நிறைந்தது. குறிப்பாக அதன் மஞ்சள் கருவில் அதிக கொழுப்பு நிறைந்துள்ளது. அதாவது ஒரு முட்டையில் 200 மில்லி கிராம் கொழுப்பு உள்ளதாம்.
ஆனால் மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 300 மில்லிகிராம் கொழுப்பே போதுமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மாலை வேளையில் பள்ளி முடிந்து உங்கள் குழந்தைகள் வீட்டிற்கு பசியோடு வந்திருப்பார்கள்.
அப்படி பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு காபி, டீ கொடுக்கும் போது, அவர்களுக்கு ஒரு மொறுமொறுப்பான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால், அவர்கள் இன்னும் சந்தோஷ மடைவார்கள் அல்லவா?
சரி, என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அந்த பிரட் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட ப்ரென்ச் டோஸ்ட் செய்து கொடுங்கள்.
இந்த ப்ரென்ச் டோஸ்ட் வித்தியாசமான சுவையுடன் குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.
தேவையானவை:
ப்ரெட் துண்டுகள் - 3
முட்டை - 2
பால் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
மிளகுத் தூள் - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு
ஆலிவ் ஆயில் - கொஞ்சம்
முஸ்லிம்கள் ஏன் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை தெரியுமா?
செய்முறை
ஒரு அகலமான கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மற்ற பொருள்கள் எல்லா வற்றையும் சேர்த்து whisk ஆல் நன்றாக அடித்துக் கொள்ளவும்.
ப்ரெட் துண்டுகளை முழு அளவிலோ அல்லது விருப்ப மான வடிவங் களிலோ துண்டுகள் போடவும். பிறகு அவற்றின் இரு பக்கங் களிலும் சிறிது ஆலிவ் ஆயில் தடவி வைக்கவும்.
தோசைக்கல் அல்லது நான்ஸ்டிக் பேனை அடுப்பி லேற்றி சூடானதும் அதில் ப்ரெட் துண்டுகளை வைத்து அதன் மேல் முட்டைக் கலவையை ஒரு ஸ்பூனால் எல்லா இடங்களிலும் படுமாறு ஊற்றி விடவும்.
ப்ரெட்டைத் திருப்பி விட்டு அடுத்தப் பக்கத் திலும் மீண்டும் மேலே சொன்னது போல் முட்டைக் கலவையை விடவும். ப்ரெட்டின் இரண்டு பக்கங்களும் சிவந்ததும் எடுத்து விடவும்.
ஸ்மார்ட்போனால் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை - எச்சரிக்கை.!
சமயங்களில் ப்ரெட்டின் உள்ளே உள்ள முட்டைக் கலவை வேகாமல் கூட இருக்கலாம். எனவே தோசைத் திருப்பியால் லேஸாக அழுத்தி விட்டு வேக விடவும்.
ப்ரெட் துண்டு களை அப்படியே முட்டைக் கலவையில் தோய்த் தெடுத்தும் டோஸ்ட் செய்யலாம். சாப்பிட கொஞ்சம் ஹெவியாக இருக்கும்.
இது மாலைநேர சிற்றுண்டிக்கும், பிள்ளைகளின் (நமக்குத் தான் ஆறினால் பிடிக்காதே) லன்ச் பாக்ஸிற்கும் பொருத்தமாக இருக்கும்.