காலா சன்னா மசாலா செய்வது எப்படி?





காலா சன்னா மசாலா செய்வது எப்படி?

கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக் கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. 
காலா சன்னா மசாலா
இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. 

மேலும் இதில் கரையும்  நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது. அதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க இவை உதவி  செய்கிறது. 
 
ஹார்மோன் ஏற்றத்தாழ்வைத் தடுக்கும். கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோ போரோசிஸ்  போன்றவற்றை எதிர்த்துப் போராடும். 

மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் உதவும். இரத்த சோகை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. 

இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள்  கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் தான் காரணம்
தேவையானவை:

கருப்பு கொண்டைக்கடலை – 250 கிராம், 

வெங்காயம் – 4, 

உருளைக் கிழங்கு பெரியது – 1, 

தக்காளி – 4, 

இஞ்சி பூண்டு விழுது – தலா 1 டீஸ்பூன், 

தனியாத் தூள் – 2 டீஸ்பூன், 

மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன், 

சுக்கு தூள் – 1/4 டீஸ்பூன், 

பொடியாக நறுக்கிய இஞ்சி, 

நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய், 

உப்பு, எண்ணெய், மல்லித்தழை – தேவைக்கு, 
நெய் – 2 டேபிள் ஸ்பூன், 

சீரகம் – சிறிது, 

கரம் மசாலா – ஒரு சிட்டிகை, 

காய்ந்த மாங்காய் தூள் – ஒரு சிட்டிகை 

செய்முறை

கருப்பு கொண்டைக் கடலை 8 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் போட்டு 20 நிமிடம் அல்லது 6 விசில் வரை வேக வைக்கவும். 

வெங்காயம், பூண்டு, இஞ்சியை அரைத்துக் கொள்ளவும். தக்காளியை தனியாக அரைக்கவும். ஒரு கடாயில் நெய் விட்டு சூடாக்கி, சீரகம் அரைத்த வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கவும். 

பின் தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இத்துடன் உப்பு மற்ற தூள்கள் சேர்த்து வதக்கி நெய் (எண்ணெய்) பிரிந்து வரும் போது மீண்டும் வேக வைத்த மூக்கடலையை சேர்த்து மேலும் குக்கரில் 1 முதல் 2 விசில் வந்ததும் இறக்கவும். 
இரண்டாவது முறை கொண்டைக் கடலையை வேக வைக்கும் போது கரம் மசாலா சேர்த்து வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கை சேர்த்து வேக விட்டு இறக்கி அதன் மேல் மல்லித்தழை தூவி பரிமாறவும். 

பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி போட்டு அலங்கரிக்கவும்.
Tags: