சுவையான கருப்பட்டி பணியாரம் செய்வது எப்படி? #Paniyaram





சுவையான கருப்பட்டி பணியாரம் செய்வது எப்படி? #Paniyaram

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப் படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர். பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.
சுவையான கருப்பட்டி பணியாரம் செய்வது எப்படி?
கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேலும் மேனி பளபளப்பு பெறும். கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும். 

சீரகத்தை வறுத்து சுக்குக் கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்து  சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு  வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.
மரணத்திற்கு பிறகு இயற்கை இரக்கம் காட்டப் போவதில்லை... படிங்க !

தேவையானப் பொருள்கள்:

இட்லி மாவு - ஒரு கிண்ணம்

கருப்பட்டி என்கிற பனை வெல்லம் - 1/2 கிண்ணம்

ரவை - ஒரு டேபிள்ஸ்பூன்

ஏலக்காய் - 1 (விருப்ப மானால்)
தேங்காய்ப்பூ - ஒரு டீஸ்பூன் (விருப்ப மானால்)

செய்முறை:

இட்லி மாவில் உப்பு குறை வாக இருக்குமாறு எடுத்துக் கொள்ளவும். வெல்ல த்தைத் தூளாக்கி 

கருப்பட்டி பணியாரம்

ஒரு அடி கனமான பாத்திர த்தில் எடுத்துக் கொண்டு அதில் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கரைய விடவும். தீ மிதமாக இருக்கட்டும்.அதிக மானால் கருக வாய்ப்புண்டு. 

தண்ணீர் கொதித்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி வெல்ல நீரை ஆற வைக்கவும். வெறும் வாணலியில் ரவையை சூடு வர வறுத்து ஆறியதும் மாவில் கொட்டிக் கலந்து வைக்கவும்.

மேலும் வெல்ல நீர், ஏலக்காய், தேங்காய்ப்பூ எல்லா வற்றையும் சேர்த்துக் கலக்கவும். ஒரு 1/2 மணி நேரம் கழித்து (மாவில் உள்ள ரவை ஊறிய பிறகு) குழி பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடு படுத்தவும்.

சட்டி சூடாகி யதும் ஒவ்வொரு குழியிலும் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு குழியின் முக்கால் பாகம் அளவிற்கு மாவை ஊற்றி, மூடி வேக வைக்கவும்.

தஞ்சைப் பெரிய கோயில் ஆழ்துளைக் கிணறு, வழிபாட்டு முறை மாற்றம் !

தீ மிதமாக இருக்கட்டும்.அதிக மானால் மேல் பாகம் தீய்ந்தும் உள்ளே வேகாமலும் இருக்கும். ஓரளவு வெந்திருக்கும் என நமக்கே தெரியும்.(எவ்வளவு இட்லி & தோசை சுட்டிருப்போம்!) 

அப்போது மூடியைத் திறந்து ஒரு ஷார்ப்பான அதே சமயம் தட்டையான ஒரு ஸ்பூனால் பணியார த்தின் ஓரங்களை பெயர்த்து, திருப்பிப் போட்டு இந்த முறை சீக்கிரமே எடுத்து விடவும்.

இப்போது சுவையான,இனிப்பான‌ பணியாரம் தயார். இதற்கு தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை.அப்படியே தான் சாப்பிட வேண்டும்.
Tags: