அருமையான காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி?





அருமையான காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி?

தினமும் இட்லி சாப்பிடுவதால், இட்லியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்குகிறது. இட்லியில் நார்ச்சத்து மட்டுமல்லாமல், இரும்பு சத்தும் உள்ளது. இதனால், உடலுக்கு தேவையான இரும்பு சத்தும் கிடைக்கும். 
அருமையான காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி?
இட்லி மாவு புளிக்க வைக்கப்படும் போது நடக்கும் நொதித்தல் செயல்முறை காரணமாக புரோ பயாடிக்குகள் உருவாகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, முதல் உணவில் இருந்து நுண்ணூட்டச் சத்துக்களை வலுப்படுத்தும். 

2 வகையான புரதங்கள் நம் உடலுக்கு தேவைப்படும். முதல் வகை புரதச்சத்து, விலங்கு இறைச்சியிலிருந்து கிடைக்கும். ஆனால், இட்லியில் இரண்டு வகையான புரதச்சத்து உள்ளது. 

அவை உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் கிடைக்கும். இட்லி மாவில் கலோரிகள் குறைவாகவே இருக்கிறது. இதனால், இட்லி சாப்பிடுவதால் உடல் எடை குறைக்க உதவி செய்யும். 
இட்லியில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால், நீண்ட நேரம் வயிறு நிறைவாக வைத்திருக்கும். பசி உணர்வும் கட்டுக்குள் இருக்கும். 

சரி இனி பச்சரிசி உளுந்து பயன்படுத்தி அருமையான காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையானவை :

பச்சரிசி - அரை கப்

உளுந்து - கால் கப்

வெந்தயம் - 4 டீஸ்பூன்

மிளகு - அரை டீஸ்பூன்

சீரகம் - முக்கால் டீஸ்பூன்

சுக்குப் பொடி - அரை டீஸ்பூன்

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

நெய் - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை- சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை : 

அருமையான காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி?

உளுந்து, வெந்தயம் இரண்டையும் சுத்தம் செய்து ஊற வையுங்கள். அரிசியைத் தனியாக ஊற வையுங்கள். அரிசியைக் கொர கொரப்பாக அரைத் தெடுங்கள்.

உளுந்தை நன்றாக அரைத்து, அரிசி மாவுடன் கலந்து, உப்பு போட்டுக் கலந்து வையுங்கள். இந்த மாவை எட்டு முதல் பத்து மணி நேரம் வரை புளிக்க வையுங்கள்.

மிளகு, சீரகத்தை ஒன்றிரண் டாகப் பொடித்துக் கொள்ளுங்கள். கரண்டியில் நெய் விட்டு சூடாக்கி, உடைத்த சீரகம், மிளகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வறுத்து மாவில் கலக்குங்கள்.
பிறகு சுக்குப் பொடி சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். ஒரு தட்டில் நெய் தடவி, பாதியளவுக்கு மாவை ஊற்றுங்கள். இந்தத் தட்டை ஆவியில் வேக வையுங்கள். ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள்.
Tags: