சால்மன் மீன்களின் அறிவியல் பெயர் சால்மோ ஆகும். இவை நன்னீர் மீன்களாகும். சால்மன் ஒரு நீல அல்லது கொழுப்பு நிறைந்த மீன் ஆகும், இது நூறு கிராம் இறைச்சிக்கு பதினொரு கிராம் கொழுப்பை வழங்குகிறது.
சால்மன் மீன்கள் சாப்பிடுவதால் முடி, தோல், மூட்டுகள் மற்றும் மூளை ஆரோக்கியமாக இருக்கும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் முக்கியமாக ஒமேகா - 3 காணப்படுகின்றன.
இது விந்தணுக்களின் தரம் மற்றும் அளவை அதிகரிக்க உதவுகிறது.
இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு நோய், மூட்டு வீக்கம், மன அழுத்தம், மூளை கோளாறுகள், தோல் கோளாறுகள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.
மேலும், இதில் இருக்கும் வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் பி5 ஆகியவை இதயத்தை பாதுகாக்க உதவுகிறது.
இந்தியாவில் கிடைக்கும் பெரும்பான்மையான சால்மன் மீன்கள் உலகில் உள்ள பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை.
நார்வே , கனடா மற்றும் ஸ்காட்லாந்து போன்ற நாடுகளில் சால்மன் வளர்ப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றிருப்பதால் உலகம் முழுக்க பயன்படுத்தப் படுகின்றது.
வேறு மீன் எதுவும் வாங்க முடியாத நேரத்தில் எப்போதாவது ஒரு சால்மன் மீன் துண்டு வாங்குவேன். குழம்பு வைக்கலாம், வைத்தால் அந்தளவுக்கு சுவை இருக்காது. ஃப்ரை பண்ணும் போது சூப்பராக இருக்கும்.
மீன் துண்டுகள்
மிளகாய் தூள் / சாம்பார் பொடி - தேவைக்கு
மஞ்சள் தூள் - சிறிது
பூண்டு பல் - விருப்பம் போல்
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை - பாதி பழம்
பூண்டு பல் - விருப்பம் போல்
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை - பாதி பழம்
செய்முறை :
மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கி, நன்றாகக் கழுவி நீரை வடிய விடவும். பூண்டுப் பல்லை தோலெடுக் காமல் அப்படியே ஒரு தட்டு தட்டி எடுத்துக் கொள்ளவும்.
தோலெடுத்து விட்டு போட்டால் வேகும் போது அடிபிடிக்கும். தோலுடன் இருந்தால் பிரச்சினை யில்லை. கடல் உணவுடன் பூண்டு சூப்பராகப் போகும். (உருளை, வாழைக்காய் பொரியல் என எல்லா வற்றுக்கும் இப்படியே சேர்த்துப் பாருங்களேன்).
ஒரு கிண்ணத்தில் மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், உப்பு மூன்றையும் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். உப்பு & காரம் சரி பார்க்கவும். குறைந்தாலும் பரவாயில்லை. வேகும் போது கொஞ்சம் தூவிக் கொள்ளலாம்.
இப்போது நீர் வடிந்து விட்டமீன் துண்டு களை ஒவ்வொன்றாக மிளகாய்த் தூளில் புரட்டி எடுத்து வேறொரு கிண்ணத்தில் வைக்கவும். (மிளகாய்த் தூள் மீதமானால் மீன் குழம்பில் சேர்த்துக் கொள்ளலாம்)
எல்லா துண்டு களையும் இவ்வாறே செய்த பின்பு மீன் துண்டுகளின் மேல் எலுமிச்சையைப் பிழிந்து விடவும். இதை ஒரு அரை மணி நேரமாவது அப்படியே வைத்தி ருந்தால் தான் மீனில் மசாலா இறங்கி இருக்கும்.
ஒரு தோசைக் கல்லை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு பூண்டு போட்டு அப்படியே நான்கு ஐந்து மீன் துண்டுகளை அதில் போட்டு மேலேயும் கொஞ்சம் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேக வைக்கவும்.
ஒரு பக்கம் வெந்து சிவந்ததும் திருப்பி விட்டு மீண்டும் மூடி போட்டு வேக விட்டு வெந்ததும் எடுத்து விடவும். இவ்வாறே மீதமுள்ள மீன் துண்டு களையும் வேக வைக்கவும்.
உடனே சாப்பிடுவ தென்றால் சாப்பிடலாம். இல்லை பிறகு சாப்பிடுவ தென்றால் நன்றாக ஆறிய பிறகு எடுத்து மூடி வைக்கவும்.