தேவையானவை :
பால் பவுடர் - 1 கப்,
நன்கு பழுத்த பெரிய மாம்பழம் - 1,
பால் - 1/2 கப்,
கன்டென்ஸ்டு மில்க் - 1/4 கப்,
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த் தூள் - 1/4 டீஸ்பூன்,
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை,
அலங்கரிக்க பாதாம்
அல்லது பிஸ்தா - தேவைக்கு.
செய்முறை
பாத்திர த்தில் சர்க்கரை, பால் பவுடரை சேர்த்து கட்டித் தட்டாமல் கலந்து, கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும்.
பின்பு பாலை சேர்த்து கலந்து மிக்சியில் நன்கு அடித்து தனியே வைத்து கொள்ள வும்.
மாம்பழத்தை தோல் நீக்கி மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ள வும்.
நான்ஸ்டிக் தவாவில் நெய் விட்டு அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து மிதமான தீயில் அடிபிடிக் காமல் கிளறவும்.
சிறிது கெட்டியாக வந்ததும் அரைத்த பால் கலவையை கொட்டி, மீண்டும் கை விடாமல் கெட்டியாக கிளறவும்.
சுருண்டு வந்ததும் ஏலக்காய்த் தூள் சேர்க்கவும்.
உருட்டும் பதத்திற்கு வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விட்டு, கையில் நெய் தடவிக் கொண்டு
விருப்ப மான வடிவத் தில் பேடாக்கள் செய்து, அதன் மேல் குங்குமப்பூ, பிஸ்தா கொண்டு அலங் கரித்து பரிமாறவும்.