இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு நிறைந்த நாவல் பழத்தின் நன்மைகள் தெரியுமா? அதைவிட, நாவல் கொட்டைகள் செய்யும் ஆச்சரிய உண்மைகள் தெரியுமா?
வைட்டமின் C, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஃபோலிக் அமிலம் என அத்தனை சத்துக்களும் இந்த நாவல் பழங்களில் உள்ளன.
அதனால் தான், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் சீன மருத்துவ முறைகளில் நாவல் பழத்தின் கொட்டைகளுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் தரப்படுகிறது.
சருமத்துக்கு மிகப்பெரிய கவசமாக இந்த பழம் திகழ்கிறது.. சுருக்கங்களை தோலில் அண்ட விடாமல் செய்கிறது. இந்த நாவல் இலைகளில் கூட, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, சாம்பல் சத்து, பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளன.
நுண்கிருமிகளை அழிக்கும் திறன் கொண்ட இந்த இலைகள், இருமல், சளி மற்றும் தொண்டை பிரச்சனைகளுக்கு நிவாரணம் தருகிறது.
நாவல் கொட்டைகளை பொறுத்தவரை, நிறைய கால்சியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் C அடங்கியுள்ளது.
இது ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு துணை புரிகிறது இந்த கொட்டைகள்.. மூளையும் பலம் பெறும். நினைவாற்றலும் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகிறது இந்த நாவல் கொட்டைகள்.
குறிப்பாக, கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க இந்த கொட்டைகள் உதவுகின்றன. அந்த வகையில், நீரிழிவு நோயாளிகளுக்கு, நாவல் பழங்களை விட, இந்த கொட்டைகள்தான் நிறைய பலன்களை தருகின்றன.
சரி இனி நாவல்பழம் பயன்படுத்தி டேஸ்டியான நாவல்பழ கேக் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானவை :
நாவல்பழ விழுது - ஒரு கப்
பொட்டுக்கடலை மாவு - கால் கப்
சர்க்கரை - முக்கால் கப்
நெய் - கால் கப்
செய்முறை :
நாவல்பழ விழுது, சர்க்கரை, பொட்டுக் கடலை மாவு ஆகிய வற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி, அடுப்பில் வைத்துக் கிளறுங்கள்.
சர்க்கரை கரைந்து, சேர்ந்தாற் போல கெட்டியாக வரும் போது நெய் விட்டுக் கிளறுங்கள். குறைவான தீயில் கிளறினால் போதும்.
நன்றாக இறுகி, அல்வா பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடலாம்.
கிருஷ்ணருக்குப் பிடிக்கும் என்பதால் நாவல் பழத்தை வைத்துப் படைப்பார்கள். துவர்ப்பும், புளிப்பு மான அதன் சுவை, குழந்தைகளுக்குப் பிடிக்காது.
இப்படி அல்வாவாகச் செய்து கொடுத்தால் விரும்பிச் சுவைப்பார்கள்.