ருசியான ஓட்ஸ் உப்புமா செய்வது எப்படி? #Uppuma





ருசியான ஓட்ஸ் உப்புமா செய்வது எப்படி? #Uppuma

இது சாதாரன ரவை உப்புமா மாதிரி தான் செய்ய வேண்டும். கொஞ்சம் பிசுபிசுப்பு இருக்கும். ஆனால் ஓட்ஸை வறுத்து செய்யும் போது நல்ல வாசனை யாகவும், சுவை கூடுதலாகவும் இருக்கும். விருப்பமானக் காய்கறிகளையும் சேர்த்து செய்யலாம்.
ருசியான ஓட்ஸ் உப்புமா செய்வது எப்படி?
தேவையானப் பொருள்கள்:

ஓட்ஸ் -  2 கப்

சின்ன வெங்காயம் - 5 லிருந்து 10 வரை

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

பச்சை மிளகாய் - 2

கொத்து மல்லி இலை - ஒரு கொத்து

எலுமிச்சை சாறு

உப்பு - தேவை யான அளவு

தாளிக்க:


நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு

உளுந்து

கடலைப் பருப்பு

காய்ந்த மிளகாய் - 2

பெருங்காயம் - சிறிது

கறிவேப்பிலை
மறைந்திருந்து நம் உடலை தாக்கும் அக்கி !
செய்முறை:
வெறும் வாணலி யில் ஓட்ஸை வாசம் வரும் வரை வறுத்துக் கொள். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி தாளிக்கக் கொடுத்துள் ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கி 4 கப்புகள் (ஒன்றுக்கு இரண்டு என) தண்ணீர் ஊற்றி கலக்கி உப்பு சேர்த்து மூடி கொதி வரும் வரை வேக விடு.

கொதி வந்ததும் திறந்து ஓட்ஸை சிறிது சிறிதாக சேர்த்து கட்டித் தட்டாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

முழுவதும் சேர்த்த பிறகு நன்றாகக் கிளறி விட்டு மிதமானத் தீயில் மூடி வேக விடு.வேகும் வரையில் இடை யிடையே அடிப் பிடிக்காத வாறு அடிக்கடி கிளறி விடவும்.

நன்றாக வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் கொத்து மல்லி தூவி, எலுமிச்சை சாறு விட்டு இறக்கு. இதனுடன் தேங்காய் சட்னி, மாங்காய் ஊறுகாய் சேர்த்து சாப்பிட சுவை யாக இருக்கும்.
பலன்கள்: 

8 மற்றும் 8+ மாத வயதுள்ள குழந்தைகளுக்கு இந்த உணவை தரலாம். நிச்சயமாக இந்த ஆரோக்கியமான உணவை அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
மேலும்

இதில் அதிக அளவு நார்ச் சத்து நிரம்பி யுள்ளது. இச்சத்து செரிமானத் திற்கு மிகவும் உதவுகின்றது. ஓட்ஸ் எடுத்துக் கொள்வதால் தேவையில்லா கொழுப்பு கரையும்.

அதனால் குழந்தைகளின் உடல் எடை குறைந்து சீரடையும். இதில் பல்வேறு விதமான விட்டமின்களும் மினரல்களும் நிறைந்துள்ளன. 

உதாரணமாக 

மெக்னீசியம், இரும்பு சத்து, கால்சியம், விட்டமின் பி1, விட்டமின் பி5 ஆகிய வற்றை குறிப்பிடலாம். ஓட்ஸ் குழந்தை களுக்கு ஆஸ்துமா தொந்தரவு வராமல் பாதுகாக்கின்றது.
Tags: