பூசணிக்காயில் பல வித நன்மைகள் நிறைந்துள்ளன. இதன் பிரகாசமான ஆரஞ்சு நிறமானது இதில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவை அதிகமாக உள்ளதை குறிக்கின்றது.
பரங்கிக்காய் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இதை சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதால், இது எடை இழப்புக்கும் உதவுகிறது.
பரங்கிக்காய் உயிரணு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பரங்கி காயில் சாம்பார் கூட்டு, பொரியல் என எத்தனையோ செய்திருப்பீர்கள். இப்படி ஒரு முறை பரங்கிக்காய் பால் கூட்டு செய்து பாருங்கள் ருசி அருமையாக இருக்கும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயசம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் . :
பரங்கிக்காய்
தண்ணீர்
மஞ்சள் பொடி
உப்பு
தேங்காய்
பச்சை மிளகாய்
சோம்பு
அரிசி மாவு
கடுகு
உளுந்தம் பருப்பு
கடலை பருப்பு
சின்ன வெங்காயம்
பெருங்காயம்
கறிவேப்பிலை
மல்லி இலை
அவர்காலு சாறு செய்வது எப்படி?
செய்முறை . :
அதில் தேவையான அளவு உப்பை சேர்த்து மூடி வைத்து வேக விட வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் கொஞ்சமாக தேங்காய், 3 பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு இரண்டு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து ஒன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
(getCard) #type=(post) #title=(You might Like)
அரிசி மாவு வீட்டில் இல்லாதவர்கள் இரண்டு ஸ்பூன் அரிசியை தண்ணீரில் ஊற வைத்து அதையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
பரங்கிக்காய் வெந்த பின்னர் அரைத்த பொருட்களை அதில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் விட்டு மீண்டும் சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
பரங்கி காயும் தேங்காயும் ஒன்றாக கலந்து தேங்காய் பச்சை வாடை போனவுடன் அடுப்பை அணைத்து விடலாம். பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியில் மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்க வேண்டும்.
அதில் ஒரு ஸ்பூன் கடலை பருப்பை சேர்த்து நன்றாக சிவக்க விட வேண்டும். கடலை பருப்பு சிவந்த பிறகு அதில் ஒரு ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்து பொரிய விட வேண்டும்.
பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை சேர்த்து நன்றாக தாளித்த பிறகு கடைசியாக கால் ஸ்பூன் பெருங்காயத்தை சேர்த்து நன்றாக கலந்து விட்டு
நிழல் இல்லா நாள் என்றால் என்ன? - சென்னையில் அதிசயம் !
ஏற்கனவே இறக்கி வைத்துள்ள பரங்கிக்காயில் சேர்த்து விட்டால் ருசியான பரங்கிக்காய் பால் கூட்டு ரெடி. கடைசியாக அதில் கொஞ்சமாக கொத்த மல்லியை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
கூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். வத்தல் குழம்பு புளி குழம்புடன் சேர்த்து சாப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும்.