குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை. இது ரத்தத்தை சுத்தப்படுத்தி நீண்ட கால நோய்களின் தாக்கத்தைக் குரைக்கக் கூடியது.
பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்வது. பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிடுவது உடலில் உல்ள கெட்ட கொழுப்பை அகற்ற உதவும்.
அடிக்கடி பருப்புக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு உடல் சூடு தணியும். மலச்சிக்கல் நீங்கும். வெயில் காலத்தில் உண்பதற்கு ஏற்ற் கீரை இது.
பருப்புக் கீரை மசியலுடன் நீராகாரம் சேர்த்து சாப்பிட்டு வர வெயில் காலத்தில் ஏற்படுகிற உடல் சூடு நீர்க்கடுப்பு வியர்க்குரு வேனல்கட்டிகல் போன்ரவை தவிர்க்கப்படும்.
அதே போல கிராமங்களில் வெயில் காலத்தில் ஏற்படுகின்ற அம்மை மற்றும் அக்கி பிரச்சனைகளுக்கும் பருப்புக் கீரையை மருந்தாக பயன்படுத்து கிரார்கள்.
பருப்புக் கீரையை நன்கு அரைத்து அக்கி வந்த இடங்களில் மேல்பூச்சாகத் தடவி வந்தால், கொப்புலங்கள் மறைந்து உடல் குளுமையடையும்.
தேவையானவை:
பருப்புக் கீரை - 1/2 கட்டு
பச்சைப் பயறு - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 1
பூண்டிதழ் - 2
அரைக்க:
தேங்காய் பத்தை - 3
காய்ந்த மிளகாய் - 1 (காரத்திற் கேற்ப)
சீரகம் - கொஞ்சம்
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து தண்ணீரில் அலசி நீரை வடிய வைக்கவும். பச்சைப் பயறு வேக ஆகும் தண்ணீரின் அளவைவிட ஒன்றிரண்டு டீஸ்பூன்கள் கூடுத லாக விட்டு
பூண்டிதழ், பெருங்காயம், மஞ்சள் தூள், இரண்டு துளி விளக்கெண் ணெய் சேர்த்து மலர வேக வைக்கவும்.குழைந்து விட வேண்டாம்.
பயறு பாதி வேகும் போதே வெங்காயம், தக்காளி சேர்த்து வேக விடவும். தேங்காயுடன், சீரகம், காய்ந்த மிளகாய் இவற்றை மிக்ஸி யில் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.
வெந்து கொண்டிருக்கும் பயறில் அரைத்த விழுது + கீரை இரண்டையும் சேர்த்து கிண்டி விட்டு கொதிக்க விடவும்.
கீரை வெந்து எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்து கீரையில் கொட்டிக் கலக்கவும். இதனை சாதத்துடனோ அல்லது சாதத்துக்கு பக்க உணவாகவோ சாப்பிடலாம்.