கேழ்வரகு, முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி?





கேழ்வரகு, முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி?

முருங்கையானது அதன் அதிக ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக ஒரு சூப்பர்ஃபுட் எனக் கருதப்படுகிறது. வைட்டமின்கள், கால்சியம், இரும்பு மற்றும் முக்கியமான அமினோ அமிலங்கள் முருங்கையில் ஏராளமாக காணப்படுகின்றன. 
கேழ்வரகு, முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி?
இது நம் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும், எலும்புகளை பலப்படுத்தும் மற்றும் கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். 

முருங்கைக் கீரையை அடிக்கடி நாம் சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண் நோய், கபம், மந்தம் போன்றவை அனைத்தும் குணமாகும். 
மேலும் உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு முறையாவது முருங்கைக் கீரையை சாப்பிட்டு வர வேண்டும்.  முருங்கைக் கீரை மலட்டுத் தன்மையை நீக்கும் தன்மை கொண்டது. 

அது தவிர மலச்சிக்கலை தீர்க்கவும் துணை புரிகிறது. அதோடு மட்டுமல்லாமல், ரத்த வெள்ளை அணுக்களின் எண்னிக்கையை அதிகரித்து ரத்த சோகையை வராமல் தடுக்கிறது. 

பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. சரி இனி கேழ்வரகு, முருங்கைக்கீரை பயன்படுத்தி டேஸ்டியான கேழ்வரகு, முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையான பொருள்கள்:

கேழ்வரகு மாவு - 1 கப்

முருங்கைக் கீரை - 2 கப்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

செய்முறை:

கேழ்வரகு, முருங்கைக்கீரை அடை
கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கவும். மாவு, கீரை 1:2 என்ற விகிதத்தில் எடுத்துக் கொள்ளவும். 

இல்லை என்றால் மாவைப் பிசைந்த பிறகு கீரை இருக்கு மிடமே தெரியாது. இப்போது மாவுடன் எல்லாப் பொருள்களையும் போட்டு கலந்து, சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும். பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணியின் மேல் வைத்து அடை போல் தட்டவும்.

முஸ்லிம்கள் ஏன் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை தெரியுமா? 

கல் காய்ந்ததும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை எடுத்துப் போட்டு சுற்றிலும், அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விடவும். எண்ணெய் விடவில்லை என்றால் அடை வெள்ளையாக இருக்கும். 

இப்போது மூடி போட்டு வேக விடவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேக விடவும். வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாற‌வும். எல்லா வகையான சட்னியுடனும் சாப்பிடலாம்.
Tags: