அசத்தலான பரங்கிக்காய் தோல் துவையல் செய்வது எப்படி? #Tuvaiyal





அசத்தலான பரங்கிக்காய் தோல் துவையல் செய்வது எப்படி? #Tuvaiyal

பரங்கிக்காயில் வைட்டமின் A ஏராளமாக நிரம்பியிருக்கின்றன. அதனால், கண்பார்வைக்கும், கண் கோளாறுகளை சரி செய்யவும் உதவக் கூடியது. 
அசத்தலான பரங்கிக்காய் தோல் துவையல் செய்வது எப்படி?
இந்த காயில், வைட்டமின்கள் B, C உள்ளதால், உடம்பில் உள்ள சூட்டை குறைத்து, குளிர்ச்சியை தரக்கூடியது. அதே சமயம், இருமல் இருந்தாலும் இந்த கீரை சாப்பிட்டால் குணமாகும். 

மேலும்,சீரான சிறுநீர் வெளியேற்றத்துக்கு இந்த பரங்கிக்காய் பயனளிக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு உதவும் காய். காரணம், இந்த பரங்கிக்காய் ஜூஸில், பெக்ட்டின் என்ற வேதிப்பொருள் உள்ளது. 
இதைக் குடிப்பதனால் கொழுப்பு சத்து குறைந்து விடும். இரும்புச்சத்து குறைபாட்டை தீர்க்கும் வல்லமை இந்த பரங்கிக்காய்க்கு உள்ளது. 

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், ஒரு டம்ளர் பரங்கிக்காய் சாறுடன், தேன் கலந்து குடித்து வந்தால் தூக்கம் சுகமாய் வரும். 

கல்லீரலுக்கு இந்த பரங்கிக்காய் நல்லது. ஹெப்படைட்டிஸ் - A என்ற வைரஸ் கிருமியை நீக்குவதன் கல்லீரலின் செயல்பாடுகளையும் அதிகரிக்க செய்கிறது. பரங்கிச்சாறு தலைமுடிக்கும் அருமருந்து.

குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்றும் சொல்வர். பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு.

குளிர்ச்சி உடம்பு இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போகும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும். இது வீரிய புஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது.

மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும். பரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். 
கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்பதற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம். சரி இனி பரங்கிக்காய் கொண்டு அசத்தலான பரங்கிக்காய் தோல் துவையல் செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
தேவையானவை :

பரங்கிக்காய் தோல் மற்றும் உள்ளிருக்கும் குடல் பகுதி (விதை நீக்கியது) - ஒரு கப்

மிளகாய் வற்றல் - 3

பெருங்காயம் – சிறிய கட்டி

கடலைப் பருப்பு, உளுந்து – தலா 2 டீஸ்பூன்

புளி - சிறிய எலுமிச்சை அளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை : 
அசத்தலான பரங்கிக்காய் தோல் துவையல் செய்வது எப்படி?
வாணலியில் எண்ணெய் விட்டு, அது சூடானதும் மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு, உளுந்து, பெருங்காயம் ஆகிய வற்றைப் பொன்னிறமாக வறுத்து, தனியே வையுங்கள்.

அதே வாணலியில் பரங்கிக்காய் தோல் மற்றும் குடல் பகுதியைச் சூடுபட வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆறியதும் அதனுடன் புளி, உப்பு சேர்த்து அரையுங்கள். வறுத்த பொருட்களைக் கொர கொரப்பாக அரைத்து, இந்த விழுதுடன் கலந்தால் பரங்கிக்காய் தோல் துவையல் தயார்.