காலை உணவிற்காக செய்த இட்லிகளில் சில மீந்து விட்டனவா? அதை நீங்கள் வீண்ணடிக்க விரும்பவில்லை என்றால், அதே சமயம் மீதமான இட்லிகளை கொண்டு ஏதாவது டின்னர் செய்யலாமா என்கிற யோசனையா?
அதற்கு சுவையான மசாலா இட்லி ஒரு அல்டிமேட் ஐடியாவாக இருக்கும். மசாலா இட்லி என்றதும் ஒரு காம்ப்ளிகேட் ஆன ரெசிபி என்று நினைத்துவிட வேண்டாம்.
குழந்தை பிறந்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கும் ?
இது சாதாரணமாக வீட்டில் நீங்கள் செய்யும் இட்லிகளுக்கு கூடுதல் சுவையை சேர்க்கும் ஒரு சிம்பிள் ஆன ரெசிபி ஆகும். பொதுவாகவே இட்லி மிகவும் டேஸ்டி ஆன ஒரு உணவாகும்.
உங்கள் கையில் சில மீதமான இட்லிகள் மற்றும் உங்கள் சமையல் அறையில் சிறிது வெண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் மற்றும் சில மசாலாப் பொருட்கள் இருந்தால் போதும் வெறும் ஐந்து நிமிடங்களில் மசாலா இட்லி தயாராகி விடும்.
தேவையானவை :
இட்லி - 4
வெங்காயம், தக்காளி – தலா 2
பட்டாணி - கால் கப்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து, கடலைப் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு
முடியின் வளர்ச்சியை வேகமாக்கும் ஷாம்பு !
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு போட்டுத் தாளியுங்கள். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள்.
அதனுடன் இஞ்சி விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு போட்டு நன்றாக வதக்குங்கள். பட்டாணி, தக்காளித் துண்டுகள் போட்டு வதக்குங்கள்.
கலவை நன்றாக வதங்கியதும் சாம்பார் பொடி கலந்து ஒரு நிமிடம் வேக விடுங்கள்.பிறகு கால் கப் தண்ணீர் விட்டுக் கொதித்து, எல்லாமே சேர்ந்தார் போல வந்ததும் இட்லியைத் துண்டு களாக்கிச் சேருங்கள்.
நன்றாகக் கிளறி கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை தூவி இறக்கி வையுங்கள்.