தென் இந்திய உணவுகளில் குறிப்பாக நம்ம ஊர் தோசை, இட்லி, மெது வடை போன்ற உணவுகளின் முக்கிய மூலப்பொருள் உளுந்து தான். உளுந்து ஏராளமான கனிமங்களையும், ஊட்டச் சத்துகளையும் கொண்டுள்ளது.
மேலும் நார்ச்சத்தானது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயுத்தொல்லை உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது. உளுந்தில் பொட்டாசியம் மிக அதிகமாக உள்ளது.
200 கிராம் உளுந்தில் ஏறத்தாழ 1500 மி.கி பொட்டாசியம் சத்து உள்ளது. உப்பு உட்கொள்வதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை நீக்குவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் குறைக்க பொட்டாசியம் சத்து உதவுகிறது.
உளுந்து 43 என்ற மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே, அவை உடனடியாக உங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது.
மேலும், உளுந்தில் அதிக அளவு ஆன்டி- ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இவை ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், டைப் 2 நீரிழிவு நோயை வராமல் தடுக்கவும் உதவும்.
சரி இனி உடைத்த கறுப்பு உளுந்து பயன்படுத்தி அருமையான உளுந்து வடை செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானப் பொருள்கள்:
உடைத்த கறுப்பு உளுந்து - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
சின்ன வெங்காயம் - 5 லிருந்து 10
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு துளி
கறிவேப்பிலை - 5
கொத்து மல்லி இலை - ஒரு கொத்து
உப்பு - தேவை யான அளவு
கடலை எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
ஆண்மையை அதிகரிக்கும் பலாக்கொட்டை !
செய்முறை:
உளுந்து,அரிசி இரண்டை யும் தனித்தனி யாக நீரில் ஊற வைக்கவும். உளுந்து நன்றாக ஊறியதும்
(சுமார் 3 மணி நேரம்) தோலைக் கழுவிக் களைந்து நீரை வடிகட்டி விட்டு ஃபிரிட்ஜில் சுமார் 1/2 மணி நேரத்திற்கு வைக்கவும். பிறகு வெளியில் எடுத்து கிரைண்டரில் போட்டுத் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்.
இடை யிடையே தண்ணீரைத் தொட்டுத் தொட்டுத் தள்ளி விட வேண்டும். குறைந்தது 1/2 மணி நேரத்திற் காவது அரைக்க வேண்டும். கெட்டி யாக இருக்க வேண்டும்.
நன்றாக அரைத்த பிறகு ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து நன்கு அடித்து கொடப்பி வைக்க வேண்டும். அப்போது தான் உளுந்து மாவு அமுங்காமல் இருக்கும்.
அடுத்து அரிசியைக் கழுவிக் களைந்து அதே கிரைண் டரில் போட்டு தண்ணீர் நிறைய ஊற்றாமல் கெட்டி யாக மைய அரைக்கவும். அதனுடன் பெருஞ்சீரகம் சேர்த்து அரைக்கவும். நன்றாக அரைத்த பிறகு வழித்து உளுந்து மாவுடன் சேர்த்துப் பிசையவும்.
இப்போது வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் கொட்டி, பெருங்காயத்தையும், தேவையான உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும். ஒரு சிறிய கிண்ணத்தில் புளித் தண்ணீர் (அ) வெல்லம் கலந்த தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். இது வடை நன்கு சிவந்து வருவதற்குத் தான்.
எண்ணெய் சூடானதும் இரண்டு உள்ளங்கை களிலும் தண்ணீரைத் தொட்டுக் கொண்டு, மாவில் இருந்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து இடது உள்ளங்கை யில் வைத்து
ஆள்காட்டி விரலைத் தண்ணீரில் நனைத்து மாவின் நடுவில் சிறு ஓட்டைப் போட்டு எண்ணெயில் போடவும். மாவை மற்ற வடைகள் போல் தட்டியோ அல்லது அமுக்கியோ போடக் கூடாது.
எண்ணெய் கொண்ட மட்டும் போடவும். எவ்வளவு பெரியதாக வேண்டு மானாலும் போடலாம். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்கவும்.
இது வெளியில் மொறுமொறு வென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும். இவ் வடைக்கு தேங்காய் சட்னி,சாம்பார், பாயசம் இவை பக்க உணவாகப் பரிமார லாம்.
குறிப்பு:
வீட்டில் சிறு பிள்ளைகள் இருந்தால் இஞ்சி, பச்சை மிளகாயை அரிசி யுடன் சேர்த்து அரைக்கவும்.
அவர்கள் ஒருமுறை வடையில் உள்ள மிளகாயைக் கடித்து விட்டால் மீண்டும் அதைச் சாப்பிடத் தயங்கு வார்கள். எனவே அரிசி யுடன் சேர்த்து அரைத்து விடலாம்.