சூப்பரான காய்கறி தயிர் பச்சடி செய்வது எப்படி?





சூப்பரான காய்கறி தயிர் பச்சடி செய்வது எப்படி?

உலகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகிறது தயிர். ஒவ்வொரு நாடுகளிலும் இதன் சுவை வெவ்வேறு விதமாக இருக்கிறது. 
சூப்பரான காய்கறி தயிர் பச்சடி செய்வது எப்படி?
இந்திய துணைக் கண்டத்தை எடுத்துக் கொண்டால், பொதுவாக தயிர் வெள்ளை நிறத்தில் அடர்த்தியாக இருக்கும். நம் நாட்டில் பசு அல்லது எருமை பாலில் தயிர் தயாரிக்கப் படுகிறது. 

பாலை புளிக்க வைத்து அதில் பாக்டீரியா உருவாவதன் காரணமாக நமக்கு தயிர் கிடைக்கிறது. இதனால் பல ஆரோக்கிய நன்மைகள் இதில் உள்ளது. பாலை புளிக்க வைப்பதால், அதிலுள்ள லாக்டோஸ் லேக்டிக் ஆசிடாக மாறுகிறது.

கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, மாக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் டி, புரதம், குடலுக்கு நல்லது செய்யும் பாக்டீரியா ஆகியவை தயிரில் இருக்கிறது. 
நம் டயட்டில் தினமும் தயிரை சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் கிடைக்கிறது. தயிரில் கால்சியம் சத்து அதிகமுள்ளது. அது மட்டுமின்றி கால்சியமை நம் உடல் உறிஞ்சுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் வைட்டமின் டி-யும் தயிரில் அதிகமுள்ளது. 

பழங்கள் அல்லது ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள் ஆகியவற்றில் தயிர் கலந்து சாப்பிட்டால் உங்களுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கும். 

தயிரில் உள்ள பாக்டீரியா நமது சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுப்பதோடு நல்ல நிறத்தையும் தருகிறது. இதிலுள்ள லாக்டிக் ஆசிட் அரிப்பு மற்றும் வீக்கத்தை குறைத்து சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது. 

தயிரில் செய்யப்பட்ட ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்துவதால் வடுக்கள், முகப்பரு, கருந்திட்டுகள், துளைகள் போன்றவை குணமாகின்றன.
தேவையான பொருட்கள்: 

வெள்ளரிக்காய் - 1 

பெரிய வெங்காயம் - 1 

தக்காளி - 1 

காரட் - 1 

கொத்து மல்லி இலை - சிறிது 

பச்சை மிளகாய் - 2 (நடுத்தர அளவு) 

உப்பு - 1/2 டீஸ்பூன் 

அல்லது ருசிக்கேற்றவாறு 

தயிர் - ஒரு பெரிய கிண்ணம் 
உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு தவிர்க்க வேண்டிய உணவுகள் !
செய்முறை: 
சூப்பரான காய்கறி தயிர் பச்சடி செய்வது எப்படி?
வெள்ளரியின் தோல் மற்றும் விதைப் பகுதியை நீக்கி விட்டு சிறு துண்டு களாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டின் தோலை சீவி விட்டு, வெள்ளரித் துண்டின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். 

தக்காளியை இரண்டாக வெட்டி, அதனுள் இருக்கும் விதை மற்றும் சாறு ஆகிய வற்றை நீக்கி விட்டு மற்ற காய்களின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறி விதையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கவும். 

கொத்து மல்லியையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தயிரை நன்றாகக் கடைந்து அத்துடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். 
இஞ்சி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?
கடைந்த தயிரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். சுவையான தயிர் பச்சடி தயார்.
Tags: