சூப்பரான கீரை மசியல் செய்வது எப்படி?





சூப்பரான கீரை மசியல் செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை. இது ரத்தத்தை சுத்தப்படுத்தி நீண்ட கால நோய்களின் தாக்கத்தைக் குரைக்கக் கூடியது. 
கீரை மசியல்
பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்வது. பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிடுவது உடலில் உல்ள கெட்ட கொழுப்பை அகற்ற உதவும். 

அடிக்கடி பருப்புக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு உடல் சூடு தணியும். மலச்சிக்கல் நீங்கும். வெயில் காலத்தில் உண்பதற்கு ஏற்ற் கீரை இது. 

பருப்புக் கீரை மசியலுடன் நீராகாரம் சேர்த்து சாப்பிட்டு வர வெயில் காலத்தில் ஏற்படுகிற  உடல் சூடு நீர்க்கடுப்பு வியர்க்குரு வேனல்கட்டிகல் போன்ரவை தவிர்க்கப்படும். 
அதே போல கிராமங்களில் வெயில் காலத்தில் ஏற்படுகின்ற  அம்மை மற்றும் அக்கி பிரச்சனைகளுக்கும் பருப்புக் கீரையை மருந்தாக பயன்படுத்துகிரார்கள். 

பருப்புக் கீரையை நன்கு அரைத்து அக்கி வந்த இடங்களில் மேல்பூச்சாகத் தடவி வந்தால், கொப்புலங்கள் மறைந்து உடல் குளுமையடையும்.

சைனீஸ் கடைகளில் கிடைக்கும் இந்தக் கீரையில், மற்ற கீரைகளைப் போல மசியல், சாம்பார், பொரியல் எது செய்தாலும் நன்றாகவே உள்ளது. 
தேவையானப் பொருள்கள்:

கீரை ( Watercress)  -  ஒரு கட்டு

பச்சைப் பருப்பு (அ) துவரம் பருப்பு  - ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் - 1

சின்ன வெங்காயம் - 2

பூண்டு - 2 பற்கள்

தக்காளி - 1/4 பாகம்

உப்பு - தேவைக்கு

தாளிக்க:


நல்லெண்ணெய் - 1/2 டீஸ்பூன்

கடுகு

உளுந்து

சீரகம்

காய்ந்த மிளகாய்

பெருங்காயம்
ஒல்லியாக இருக்க அடிக்கடி சாப்பிடலாம் !
செய்முறை:
கீரையை ஆய்ந்து அலசி நீரை வடிய வைக்கவும். பச்சைப் பருப்பை வெறும் வாணலி யில் சிவக்க வறுத்து ஆறியதும் கழுவி விட்டு 

ஒரு பாத்திர த்தில் எடுத்துக் கொண்டு அது வேகும் அளவு தண்ணீர் ஊற்றி, துளி மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைக்கவும். 

ஒரு சொட்டு விளக் கெண்ணெய் விட்டால் பருப்பு சீக்கிரமே குழைய வெந்து விடும். பருப்பு பாதி வேகும் நிலையில் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வேக வைக்கவும்.

எல்லாம் சேர்ந்து வெந்து வரும் போது கீரையைப் போட்டு வேக வைக்கவும்.இப்போது மூட வேண்டாம்.

சிறிது நேரத்திலேயே கீரை வெந்து விடும்.வெந்ததும் இறக்கி ஆற வைத்து அதில் சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் மசிந்து விடும்.
டெங்கு, சிக்குன் குனியா பயப்பட வேண்டாம்?
ஒரு வாணலி யில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத் துள்ளப் பொருள் களைத் தாளித்துக் கீரையில் கொட்டி மேலும் ஒரு சுற்று சுற்றினால் போதும். இப்போது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை யான கீரை மசியல் தயார்.
Tags: