கோதுமை ரவை பொங்கல் செய்வது எப்படி?





கோதுமை ரவை பொங்கல் செய்வது எப்படி?

ரவை உங்களை நிறைவாக வைத்திருக்கிறது மற்றும் ஒருவர் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால், இது குறுகிய காலத்தில் உடல் எடையை குறைக்கவும், உடல் எடையை பராமரிக்கவும் உதவுகிறது. 
கோதுமை ரவை பொங்கல் செய்வது எப்படி?
ரவை மிகவும் மெதுவாக ஜீரணிக்கப்படுகிறது, இது அதிக கொழுப்பை வெளியேற்றுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
ரவையில் இருக்கும் நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் செயல்பாட்டிற்கு சிறப்பாக உதவும். இதன் விளைவாக ஒருவர் உணவை எளிதில் ஜீரணிக்க முடியும் மற்றும் எளிதாக குடல் இயக்கத்திற்கும் உதவுகிறது. 

ரவை இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ரவையில் செலினியம் என்ற வேதிப்பொருள் உள்ளது, இது இதயத்தை நோய்த்தொற்று களிலிருந்து பாதுகாக்கும். 

ரவை இதயத்தையும் நல்ல நிலையில் வைத்திருக்கும். இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்றவற்றை தடுக்கிறது.

தேவையானப் பொருள்கள்:

கோதுமை ரவை - 2 கப்

பச்சைப் பருப்பு - 1/2 கப்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

தாளிக்க:

நெய் - 2 டீஸ்பூன்

மிளகு - ஒரு டீஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

முந்திரி - 10

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

கறிவேப்பிலை

செய்முறை:

இதன் செய்முறையும் சாதாரண வெண்பொங்கல் செய்வது மாதிரி தான். முதலில் பச்சைப் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க, வாசம் வரும் வரை வறுத்து ஆறியதும் கழுவி விட்டு, தேவையானத் தண்ணீர் விட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

பாதி வெந்த நிலையில் கோதுமை ரவையைக் கழுவி விட்டு (வறுக்க வேண்டாம்) ஒன்றுக்கு மூன்று அல்லது அதற்கும் மேல் தண்ணீர் விட்டு, உப்பு போட்டு பருப்புடன் சேர்த்து வேக விடவும். 

குழந்தை பிறந்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கும் ?

இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து குழைய வேக வேண்டும். ஒரு வாணலி யில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத் துள்ளப் பொருள் களைத் தாளித்து பொங்கலில் கொட்டிக் கிளறி இறக்கவும்.

அல்லது தாளிப்பு முடிந்ததும் பொங்கலை வாணலியில் கொட்டிக் கிளறி இற‌க்கலாம். பொங்கலுக்கு தேங்காய் சட்னி அல்லது சாம்பார் நன்றாக இருக்கும்.
Tags: