சுவையான மஞ்சள் பூசணி & வேர்க்கடலை கூட்டு செய்வது எப்படி? #Koottu





சுவையான மஞ்சள் பூசணி & வேர்க்கடலை கூட்டு செய்வது எப்படி? #Koottu

வேர்க்கடலை நம்மை பொறுத்தவரை ஒரு சிறந்த சிற்றுண்டி. சிலர் வேக வைத்து, சிலர் வறுத்து, சிலர் கடலை மிட்டாயாக என பல்வேறு வடிவங்களில் எடுத்துக் கொள்வார்கள். 
சுவையான மஞ்சள் பூசணி & வேர்க்கடலை கூட்டு செய்வது எப்படி?
மேலும் நாம் அடிக்கடி சாப்பிடும் மிக்சர் போன்ற பல்வேறு உணவுப் பொருட்களிலும் வேர்க்கடலை சேர்க்கப் படுகிறது. இவை எளிதாக கிடைக்கக் கூடியது, விலை மலிவானது. 
ஆனால் ஆரோக்கியத்தில் அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாம் பருப்புகளைப் போல் சக்தி வாய்ந்தவை. வேர்க்கடலை உண்மையில் பீன்ஸ், பயறு மற்றும் சோயா போன்ற பயிர்களின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பருப்பு வகைகள். 

னால் வேர்க்கடலை தனித்து நிற்கிறது, காரணம் இவற்றை பச்சையாகச் சாப்பிடலாம், அதனால் தான் வேர்க்கடலையை கடலைப்பருப்பு மற்றும் பீன்ஸ் ஆகியவற்றைக் காட்டிலும் பாதாம், முந்திரி, அக்ரூட் பருப்புகள் மற்றும் பிஸ்தாக்களுடன் சேர்த்துப் பார்க்க அதிக வாய்ப்பு உள்ளது.

வேர்க்கடலை மோனோ மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளின் வளமான மூலமாகும், அவை உடலுக்கு ஆரோக்கியமான மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாக கருதப்படுகின்றன. 
கார்போ ஹைட்ரேட்டுகள் குறைவாக இருந்தாலும், தாவர புரதங்கள் நிறைந்திருப்பதால், எந்தவொரு உணவு முறையையும் பின்பற்று பவர்களுக்கும் வேர்க்கடலை புரதத்தின் சிறந்த ஆதாரமாக அமைகிறது. 

வேர்க்கடலையில் வைட்டமின்கள் ஈ, பி1, பி3 மற்றும் பி9 மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

ஹரியாலி சமோசா செய்வது எப்படி?

தேவையானவை:

மஞ்சள் பூசணி -  1/4 கீற்று

வறுத்த வேர்க்கடலை - ஒரு கைப்பிடி (தோல் நீக்கியது)

காய்ந்த மிளகாய் - 3
உப்பு - தேவைக்கு

செய்முறை:

மஞ்சள் பூசணி & வேர்க்கடலைக் கூட்டு
பூசணியை சிறுசிறு துண்டு களாக நறுக்கி,ஒரு கெட்டியானப் பாத்திர த்தில் எடுத்துக் கொண்டு அதில் ஒரு 1/4 டம்ளர் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.

மிளகாயை வெறும் வாணலில் போட்டு சூடாகியதும் எடுத்து ஆறியதும் வேர்க் கடலை யுடன் சேர்த்துக் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். காய் அடிப் பிடிக்காமல் கிண்டி விடவும். 

காய் வேகும் போதே தண்ணீர் விட்டுக் கொள்ளும். நன்றாக வெந்த பிறகு உப்பு சேர்த்துக் கிளறி விடவும். முதலிலேயே உப்பு சேர்த்தால் காயின் அளவைப் பார்த்து நிறைய சேர்த்து விடுவோம். 
கேக் செய்ய பேக்கிங் ஓவன் தேவையில்லை குக்கரில் செய்வது எப்படி?
இது நீர்க்காய் என்பதால் வெந்த பிறகு அளவு குறைந் திருக்கும். இப்போது பொடித்து வைத் துள்ளப் பொடியைக் காயுடன் சேர்த்து நன்றாகக் கிளறி விட்டு இறக்கவும்.

இதை சாதாரண கூட்டு போலவே சாதத்துடன் சேர்த்து அல்லது தொட்டுக் கொண்டும் சாப்பிட லாம்.