வெங்காயத்தாளனது சாலட் வெங்காயம், சுருள் வெங்காயம், பச்சை வெங்காயம் என பலவாறு அழைக்கப் படுகிறது. இது சாம்பார் வெங்காயம், பல்லாரி, பூண்டு ஆகியவற்றின் குடும்பத்தை சேர்ந்த கீரையாகும்.
வெங்காய தாளின் மேற்பகுதியானது பச்சையாகவும், அடிப்பகுதி வெள்ளையாகவும் இருக்கும். வெங்காயத்தாளில் குறைந்த கலோரிகளே இருக்கின்றன.
மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.
வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் கார்போ ஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. மேலும் கண்நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.
வெங்காயத்தாள் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் உடலின் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது.
மேலும் வெங்காயத்தாள் கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.
வெங்காயத்தாள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, புற்றுநோயை குணப்படுத்தும். வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் கூட வழங்குகிறது.
தேவையானவை:
சீரக சம்பா அரிசி – ஒரு கப்,
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
முந்திரிப் பருப்பு – 10,
வெங்காயத் தாள் – சிறு கட்டு,
தக்காளி – ஒன்று,
பிரிஞ்சி இலை – ஒன்று,
மிகவும் பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித் தழை – தலா ஒரு கைப்பிடி அளவு,
பச்சை மிளகாய் – 4 (கீறிக் கொள்ளவும்),
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
சீரக சம்பா அரிசியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். வெங்காயத் தாள், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். முந்திரியை பொடித்துக் கொள்ளவும்.
சிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி?
பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து, பச்சை மிளகாயை சேர்த்துக் கிளறி, தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இதனுடன் பொடித்த முந்திரி, நறுக்கிய வெங்காயத் தாள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, உதிராக வடித்த சாதம் நறுக்கிய புதினா, கொத்த மல்லித் தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.