வாழைப்பூ பிரியாணி செய்வது எப்படி?





வாழைப்பூ பிரியாணி செய்வது எப்படி?

வாழைப்பூவில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. இது ஹீமோகுளோபின் குறைபாட்டை நிவர்த்தி செய்கிறது. இதை வாரம் வரும் முறை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனையையும் குறைக்கலாம். 
வாழைப்பூ பிரியாணி
மேலும் இதில் பொட்டாசியம், கால்சியம், தாமிரம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் E போன்ற ஏராளமான சத்துக்களும் உள்ளன. வாழைப்பூ குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. 

இதை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரையின் அளவை பெருமளவு கட்டுப் படுத்தலாம். இன்றைய வாழ்க்கை சூழலில் பத்தில் ஐந்து பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப் படுகின்றனர். 

இந்நிலையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், வராமல் தடுக்கவும் வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
உங்கள் சுவையை தூண்டும் வாழைப்பூ பிரியாணி சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான வாழைப்பூ பிரியாணி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க! 

தேவையானவை 

கொத்த மல்லி இலை – கால் கப் 

தேங்காய்த் துருவல் - கால் கப் 

வாழைப்பூ - ஒரு கப் 

நெய், முந்திரி - தலா ஒரு டேபிள் ஸ்பூன் 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு 

தக்காளி - ஒன்று 

பச்சை மிளகாய் - 2 

புதினா இலை, மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன் 

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை 

சோம்பு, பிரிஞ்சி இலை, கசகசா வறுத்துப் பொடித்தது - ஒரு டீஸ்பூன் 

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன் 

பட்டை, வெங்காயம் – ஒன்று 

தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன் 

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் 

பச்சரிசி அல்லது பாசுமதி அரிசி - 2 கப் 

செய்முறை : 

வாழைப்பூ பிரியாணி முதலில் வாழைப் பூவைத் தயிரில் போட்டு பத்து நிமிடம் தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

பின்பு அரிசியை வெறும் வாணலியில் வறுத்துத் தனியே வையுங்கள். அரைக்க வேண்டிய மசாலாப் பொருட் களை அரைத்துக் கொள்ளுங்கள். 

குக்கரில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பின்னர் வாழைப் பூவை வதக்கிக் கொள்ளுங்கள். இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கி, மிளகாய்த் தூள், அரைத்த விழுது சேர்த்து வதக்குங்கள். 
பிறகு உப்பு சேர்த்து, மூன்று கப் தண்ணீர் விட்டு அரிசி, மசாலாப் பொடி சேர்த்து நன்றாகக் கலந்து குக்கரை மூடி விடுங்கள். 
தக்காளி குருமா செய்வது எப்படி?

ஒரு விசில் வந்ததும் இறக்கி வையுங்கள். குக்கரைத் திறந்து நெய்யில் வறுத்த முந்திரியைத் தூவிப் பரிமாறுங்கள். வெள்ளரி, தயிர் பச்சடியுடன் சேர்த்துச் சாப்பிட லாம்.பரிமாறவும்
Tags: