சுவையான சைனீஸ் பேல் செய்வது எப்படி? #Noodles





சுவையான சைனீஸ் பேல் செய்வது எப்படி? #Noodles

இன்றைய வேகமான உலகத்தில், எதற்குமே நேரம் கிடைக்காமல் ஓடிக்கொண்டிருக்கும் பல நபர்கள் ஜங்க் உணவுகளை நாடி செல்கின்றனர். 
சுவையான சைனீஸ் பேல் செய்வது எப்படி?
நேரமின்மையும், அளவுக்கு அதிகமான வேலை பளுவும் சேர்ந்து மேகி நூடுல்ஸ் போன்ற உணவுகளை உண்ணும் நிலைக்கு நம்மை தள்ளி விட்டுள்ளது. 

ஆம், பிறகு என்ன அதை உட்கொள்வதற்கு 2 கப் வெந்நீர் இருந்தால் போதும் தானே. ஆனால் இவ்வளவு வேகமாக தயாராகும் உணவுக்கு கண்டிப்பாக ஜங்க் உணவு பட்டியலில் இடமுள்ளது. 
உடல் ஆரோக்கிய வல்லுனர்களால் ஜங்க் உணவு வகையில் சேர்க்கப்பட்டுள்ள மேகி நூடுல்ஸில் மைதா சேர்க்கப் பட்டுள்ளது. 

அதாவது மிஞ்சிய மைதா உமியில் இருந்து தயார் செய்யப்படுவதால் இதில் கொழுப்பு, கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும். இது சுலபமாக செரிமானமாகும் உணவல்ல. 

அதனால் ஜங்க் உணவான இது நம் உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். 
இந்த நூடூல்ஸில், கற்றல், நடத்தையில் பாதிப்பை உருவாக்கும் எம்.எஸ்.ஜி. என்ற மோனோசோடியம் குளுட்டோமேட் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் இருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உ.பியில் நடந்த ஆய்வில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது. இது ஒரு உப்பு ஆகும். உணவின் ருசியை அதிகரிக்க சேர்க்கிரார்கள். ஆனால் இதன் அளவு மிக மிக அதிகமாக நூடூல்ஸில் இருக்கிறதாம். 

அனுமதிக்கப்பட்ட அளவு என்பது 0.01 பிபிஎம்தான். ஆனால் மேகி நூடூல்ஸில் இது 17 பிபிஎம் ஆக உள்ளதாம்.
தோல் தொல்லையும் அதற்கான காரணமும் !
தேவையானவை: 

பொரித்த நூடுல்ஸ் – ஒரு கப் 

வேக வைத்த உருளைக் கிழங்கு – ஒன்று 

கேரட் – ஒன்று குட மிளகாய் – ஒன்று 

முட்டை கோஸ் – கால் கப் 

பொடியாக நறுக்கிய பூண்டு – 3 பல் 

உப்பு – தேவை யான அளவு 

சில்லி ஃப்ளேக்ஸ் – அரை டீஸ்பூன் 

துருவிய பச்சை மாங்காய் – கால் கப் 

கொத்த மல்லித் தழை – தேவை யான அளவு 
தக்காளி சாஸ் - ஒரு டேபிள் ஸ்பூன் 
செய்முறை: 

சைனீஸ் பேல் செய்வது
உருளைக்கிழங்கை க்யூப்பாகவும், கேரட், குடமிளகாய், முட்டை கோஸை நீள வாக்கிலும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

நூடுல்ஸ் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் காய்களுடன் சேர்த்து, கலந்து நூடுல்ஸை கடைசியாகச் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.
Tags: