கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின் C, B காம்ப்ளக்ஸ், நார்ச்சத்து, சர்க்கரை, கொழுப்பு, லாரிக் அமிலம், காப்ரிக் அமிலங்கள், என பல சத்துக்கள் நிரம்பியது தான் தேங்காய்.
இவை யெல்லாமே ஒரு மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் சத்துக்கள் ஆகும். இதிலுள்ள அளவுக்கு அதிகமான நார்ச்சத்து தான், ரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுக்க உதவுகின்றன.
நோய் தொற்றுக்கு எதிராக செயல்படுகிறது. முதுமையை தள்ளி போட்டு, சரும ஆரோக்கியத்தை பேணிகாக்கிறது. அல்சர், வயிற்றெரிச்சல், அல்சீமர் நோய் போன்ற பாதிப்புகளையும் நீக்குகிறது.
தேங்காயில், கொழுப்பு ஹைப்பர் லிப்பிடிமியா, போன்றவை உள்ளதால், இதயத்துக்கு கெடுதி என்றும், தேங்காய் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வந்துவிடும் என்று சொல்லப்பட்டது.
ஆனால், இதெல்லாம் பொய்யான கூற்றுகள். தேங்காயிலுள்ள சேச்சுரேடட் கொழுப்பு அமிலங்கள் ஆத்ரோஜெனிக் வடிவமானவை.
இதனால், கொழுப்புகள் அதிகமாக உடலில் தங்குவதில்லை என்பதால், கொலஸ்ட்ரால் தொந்தரவு ஏற்படவும் வாய்ப்பில்லை.
தேவையானவை :
சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2 பெரியது
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிது
தேங்காய் – 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவை யான அளவு
கொத்த மல்லி இலை – 2 டீஸ்பூன்
பெருஞ் சீரகம் – 1 தேக்கரண்டி
பட்டை – 1 சிறிய
கருப்பு ஏலக்காய் – 1
பச்சை ஏலக்காய் – 3
எண்ணெய் – 3 – 4 டீஸ்பூன்
உங்கள் முடி இப்படி இருந்தால் மாரடைப்பு ஏற்படுமாம் !
செய்முறை :
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பெருஞ் சீரகம், பட்டை, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய் சேர்த்து 30 நொடிகள் சமைக்கவும்.
பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பொன் நிறமாக வதக்கவும். இப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் சமைக்கவும்.
பிறகு கரம் மசாலா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, சிக்கனை சேர்த்து அதனுடன் தண்ணீர் 1/2 கப் சேர்த்து நன்கு கலந்து ஒரு மூடி கொண்டு கடாயை மூடி 30 முதல் 35 நிமிடங்கள் சமைக்கவும்.
இப்போது மூடி திறந்து தேங்காய் சேர்த்து நன்கு கலந்து, தேங்காய் நன்றாக நிறம் மாறும் வரை வறுக்கவும். இப்போது, கொத்த மல்லி இலைகள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.