அருமையான கொத்தமல்லி புலாவ் செய்வது எப்படி?





அருமையான கொத்தமல்லி புலாவ் செய்வது எப்படி?

மருத்துவ குணங்களை கொண்ட கொத்தமல்லி இலைகளை நாம் அன்றாடம் சமையலுக்கும் பயன்படுத்தி வருகிறோம். இதில் நார்ச்சத்துக்கள், இரும்புச் சத்து, மாங்கனீஸ், கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. 
அருமையான கொத்தமல்லி புலாவ் செய்வது எப்படி?
கொத்த மல்லியின் விதை, காரம், கசப்பு, துவப்பு, இனிப்பு என 4 விதமான சுவைகளை கொண்டது. கொத்தமல்லி தாவரத்தின் தண்டு, இலை மற்றும் வேர் என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவை.

கொத்தமல்லி இலைகளில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இவை உடலின் செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணம் ஆகச் செய்ய உதவுகிறது.

ஆரோக்கியமான கண் பார்வைக்கு கொத்தமல்லி இலைகள் சிறந்தது. கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும்.
கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து கொத்தமல்லியைச் சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 

இதிலுள்ள வைட்டமின் சி சத்து இரத்த வெள்ளை அணுக்களை திறம்பட செயல்பட வைக்க உதவுகிறது. இரும்புச் சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

கொத்தமல்லி இலைகளை வழக்கமாக உட்கொள்வது எல். டி. எல் போன்ற கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பயன்படுகிறது. நல்ல கொழுப்பை மேம்படுத்த உதவுகிறது.
ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது. இன்சுலின் சுரப்பை தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை கொண்டது.

தினமும் நாம் உண்ணும் உணவில் ஏதோ ஒரு விதத்தில் கொத்தமல்லியை சேர்த்து வந்தால் நோயற்ற ஆரோகியமான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழலாம்.
குடிப்பழக்கத்தால் ஏற்படும் மூளைக் கோளாறுகள் !
தேவையானவை: 

பாசுமதி அரிசி – 2 கப்,

தேங்காய்ப் பால் – அரை கப்,

தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன்,

கொத்த மல்லித் தழை – ஒரு கட்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),

பெரிய வெங்காயம் – 2,

பச்சை மிளகாய் – 4,

இஞ்சி – சிறு துண்டு,

பூண்டு – 4 பல்,

பட்டை – சிறு துண்டு,

லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று,

எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்,

எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 

கொத்தமல்லி புலாவ்
பெரிய வெங்காய த்தை நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகிய வற்றுடன் கொத்த மல்லித் தழை சேர்த்து விழுதாக அரைக்கவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து… நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

பின்னர், அரைத்த கொத்த மல்லி விழுது, தயிர், எலுமிச்சைச் சாறு, தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி, இரண்டரை கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள் என்ன?
நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியை சேர்த்து நன்றாக கிளறி குக்கரை மூடவும். ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, பரிமாறவும்.
Tags: