குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது அதிலும் பழவகைகளை கொடுக்கும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஸ்ட்ராபெர்ரி குழந்தைக்கு ஒவ்வாமை எதிர்வினையை உண்டாக்க செய்யும்.
குழந்தைக்கு 1 வயது ஆன பிறகு தான் ஸ்ட்ராபெர்ரி கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது.ஸ்ட்ராபெர்ரி வைட்டமின் சி நிறைந்தவை. இது சருமத்துக்கு நன்மை செய்யகூடும்.
நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்க கூடியது. குழந்தைகளுக்கு ஸ்ட்ராபெர்ரி அளிக்கும் நன்மைகள் அளவிட முடியாதது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கவும் கண் நோய்களை எதிர்த்து போராடவும் செய்யும்.
கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் நல்ல ஆதாரம் இது. எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் இன்றியமையாதது. மேலும் இதயம், தசைகள், நரம்புகளின் சரியான செயல்பாட்டிற்கும் உதவுகிறது.
பாஸ்பரஸ் செரிமானத்தை மேம்படுத்தலாம். செல்களை சரி செய்ய உதவும். புரதத்தை உடைக்க உதவும். மேலும் உடலில் பரவும் வேதியியல் எதிர் வினைகளை ஒழுங்கு படுத்துகிறது.
ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் அதிக உள்ள இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து கல்லீரலுக்கு சேதத்தை தடுக்கும். இதில் உள்ள ஃபோலேட் நல்ல ஆதாரம் குட. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஃபோலிக் அமிலம் அவசியம்.
உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் இவை உதவுகிறது.சரி இனி பிரெட் பயன்படுத்தி டேஸ்டியான பிரெட் ஸ்வீட் ரோல் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானவை:
ஸ்வீட் பிரெட் – 10 ஸ்லைஸ்
ஸ்ட்ராபெர்ரி ஜாம் – ஒரு டேபிள் ஸ்பூன்
மாங்கோ ஜாம் – ஒரு டேபிள் ஸ்பூன்
சாக்லேட் ஸ்பிரெட் – ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பிரெட்டின் பிரவுன் நிற ஓரங்களை நீக்கி விட்டு, சப்பாத்தி கட்டை யால் பிரெட்டை அழுத்தி ரோல் செய்யவும்.
ஒவ்வொரு பிரெட்டிலும் ஒவ்வொரு விதமான ஜாம், சாக்லேட் ஸ்பிரெட் தடவி, துண்டு களாக்கி படத்தில் காட்டி யிருப்பது போல சுருட்டி வைத்து பரிமாறினால் அத்தனையும் நொடியில் காலியாகும்.
குறிப்பு:
சாக்லேட் ஸ்பிரெட் என்பது சாக்லேட் சுவை கொண்ட பேஸ்ட். இதை பிரெட்டின் மீது தடவி சாப்பிடு வார்கள்.
டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் களில் கிடைக்கும்.