புரோட்டீன், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் C, B1, B2, B6, B9 சத்துக்கள் நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு வெண்டைக்காய் போல சிறந்த உணவு வேறில்லை.
ஞாபக ரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு வயிற்றுப்புண், பார்வை குறைபாடு இன்னும் ஏகப்பட்ட நோய்களை இந்த வெண்டைக்காய் தீர்க்கிறது.
வெண்டைக்காயின் ஸ்பெஷாலிட்டியே அதன் வழவழப்புத் தன்மைதான். ஆனால், பலருக்கும் அந்த வழவழப்பு பிடிப்பதில்லை. அந்த வழவழப்பு இருப்பதாலேயே நிறைய பேர் வெண்டைக்காயை தவிர்த்து விடுவார்கள்.
சிலர் அந்த வழவழப்பு போகும் வரை வெறும் வாணலில் வதக்கி விட்டு, அதற்கு பிறகு சமையலுக்கு வெண்டைக்காயை பயன்படுத்துவார்கள்.
உண்மையை சொல்லப் போனால், அந்த வழவழப்புத் தன்மையில் தான், வெண்டைக்காயின் மொத்த மருத்துவ பலன்களும் மறைந்திருக்கிறதாம். முக்கியமாக, நார்ச்சத்து இந்த வழவழப்பில் தான் உள்ளது.
அல்சர், வயிற்றுப்புண் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த வழவழ நார்ச்சத்து மருந்தாக உதவுகிறது. வெண்டைக்காயிலுள்ள பெக்டின் (Pectin) மற்றும் கோந்துத் தன்மையே இந்த வழவழப்புக்கு காரணமாக உள்ளது.
பெக்டின் + கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு, பித்த நீர் அதிகரிக்காமல் தடுக்கச் செய்து விடுகிறது.
அத்துடன், மலச்சிக்கல் பிரச்சனையையும், வயிறு உபாதைகளையும் இந்த வழவழ வெண்டைக்காய் தான் போக்குகிறது. அளவுக்கு அதிகமான ஆண்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ள வெண்டைக்காயில், கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம்.
இந்த நார்ச்சத்துக்கள்தான் கொலஸ்ட்டிராலின் அளவையும் கட்டுப்படுத்தி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாய நோய்கள் ஏற்படுவதை தடுக்கின்றன.
வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் C, ஆஸ்துமாவை விரட்டக்கூடியது. வெண்டைக்காயிலுள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்கக் கூடியது. இந்த ஃபோலிக் அமிலம் தான், கர்ப்பிணிகளுக்கு மிகவும் தேவையான சத்துக்களாகும்.
கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்
சரி இனி அருமையான ஃப்ரைடு பின்டி பச்சடி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையானவை :
வெண்டைக்காய் - 1/4 கிலோ,
பச்சை மிளகாய் - 4,
கறிவேப்பிலை - 2
கொத்து,
எண்ணெய் - 100 மி.லி.,
கடைந்த தயிர் - 250 மி.லி.,
தாளிக்க கடுகு, உளுத்தம் பருப்பு,
பெருங்காயத் தூள், உப்பு - தேவைக்கு.
செய்முறை :
வெண்டைக் காய், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து வெண்டைக் காய், பச்சை மிளகாயை பொரித்து எடுக்கவும். பின் கறிவேப் பிலையை பொரித்து எடுக்கவும்.
குடும்பத்தையே சீரழித்த ஒரு கள்ளக்காதல்
ஒரு பாத்திர த்தில் கடைந்த தயிர், உப்பு, பெருங்காயத் தூள், பொரித்த வெண்டைக் காய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு கலந்து, மற்றொரு கடாயில் கடுகு, உளுந்து தாளித்து கொட்டி பரிமாறவும்.