பொதுவாகவே எல்லா பழங்களிலுமே ஊட்டச்சத்து நிறைந்திருக்கும். ஒரு சில பழ வகைகளில் அரிதாக காணப்படும் ஊட்டச் சத்துக்களோடு, உடலுக்குத் தேவைப்படும் பல்வேறு நன்மைகளும் கிடைக்கும்.
அந்த வகையில் கிரானி ஸ்மித் என்று கூறப்படும் பச்சை நிற ஆப்பிள் அதாவது கிரீன் ஆப்பிளும் ஒன்று. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை வாழ்நாள் முழுவதும் சந்திக்கத் தேவையில்லை என்று கூறுவார்கள்.
சிவப்பு நிறத்தில் இருக்கும் சுவையான ஆப்பிளை விரும்பாதவர்களே கிடையாது என்று கூறலாம். ஆனால் சிவப்பு ஆப்பிளை விட கிரீன் ஆப்பிள் பல மடங்கு அதிக ஊட்டச் சத்துகளைக் கொண்டுள்ளது.
வைட்டமின் ஏ சத்து என்று வரும் போது, பலருக்கும் கேரட் தான் முதலில் நினைவுக்கு வரும். கேரட்டில் இருப்பது போலவே, கிரீன் ஆப்பிளிலும் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது.
கிரீன் ஆப்பிள் சாப்பிட்டு வருவது பார்வையை பலப்படுத்துவதோடு, கண்கள் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. குறிப்பாக, கண்கள் வறண்டு போவதைத் தடுக்கிறது. பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடக்கூடாது.
முக்கிய காரணமாக, பழங்களில் இருக்கும் சர்க்கரை, சட்டென்று உடலின் ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தி விடும். ஆனால் க்ரீன் ஆப்பிள் இனிப்பாக இருக்காது. இதில் புளிப்பும் இனிப்பும் ஆன சுவை கலந்திருக்கும்.
மேலும், சிவப்பு ஆப்பிளில் இருப்பது போல சர்க்கரை அளவு அதிகம் கிடையாது. எனவே கிரீன் ஆப்பிளை தினசரி சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை எளிதாக நிர்வகிக்க உதவும்.
கிரீன் ஆப்பிள் சாப்பிடுவது வயிறு நிறைந்தத் தன்மையை ஏற்படுத்தும். இதனால் அடிக்கடி பசிப்பது போன்ற உணர்வும் குறையும்.
குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள் என்ன?
தேவையானவை:
சற்றே புளிப்பான க்ரீன் ஆப்பிள் – 2,
சீரக சம்பா அரிசி – ஒரு கப்,
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
பெருஞ்சீரகம் – கால் டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை, புதினா – சிறிதளவு,
நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சீரக சம்பா அரிசி – ஒரு கப்,
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
பெருஞ்சீரகம் – கால் டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை, புதினா – சிறிதளவு,
நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
க்ரீன் ஆப்பிளை துருவிக் கொள்ளவும். சீரக சம்பா அரிசியை உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பெருஞ் சீரகம் தாளித்து… இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிறகு, துருவிய ஆப்பிள், உப்பு சேர்த்து வதக்கி, உதிராக வடித்த சாதத்தை சேர்த்துக் கிளறவும். கொத்த மல்லித்தழை, புதினா தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பெருஞ் சீரகம் தாளித்து… இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிறகு, துருவிய ஆப்பிள், உப்பு சேர்த்து வதக்கி, உதிராக வடித்த சாதத்தை சேர்த்துக் கிளறவும். கொத்த மல்லித்தழை, புதினா தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.
குடிப்பழக்கத்தால் ஏற்படும் மூளைக் கோளாறுகள் !தயிரில் காராபூந்தி சேர்த்த ராய்த்தா இதற்கு சரியான இணை.