கசகசா... நம்ம ஊர் மளிகைக் கடைகளில் சர்வசாதாரணமாக கிடைக்கும் உணவுப் பொருள். ஆனால், இதை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக வளைகுடா நாடுகள் கசகசாவுடன் வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுத்து வருகிறது. கசகசாவில் இருக்கும் ஒலிக் அமிலமானது உடலில் ரத்த அழுத்த அளவை கட்டுப் படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இவை தவிர தைராய்டு, வாய்ப்புண் கோளாறுகள், கண்பார்வை சீர்பட, சிறுநீரககல் தவிர்க்க, நீரிழிவு நோயாளிகள், வலி நிவாரணியாக, செரிமானத்தை எளிதாக்க என பலவகையில் பயன் தருகிறது.
கொலஸ்ட்ரால் அதிகரித்தால் கண்களில் தெரியும் அறிகுறிகள் !
காரசாரமான மட்டன், சிக்கன் குழம்பு மற்றும் பிரியாணி போன்ற அசைவ உணவுகளில் ருசியைக் கூட்ட கசகசா சேர்க்கப் படுகிறது.
மேற்குலக நாடுகளிலும் ‘பாப்பி விதை’ (POPPY SEED) என்று அழைக்கப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. கசகசாவில் போதை இல்லை என்றாலும், ஓபியம் தயாரிக்கப்படும் செடியின் விதை என்பதால், தடை செய்துள்ளார்கள்.
காரணம், இந்த விதையை விதைத்து, கசகசா செடியை வளர்த்து ஓபியம் எடுத்துவிட முடியும். அதனால்தான், கசகசாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேவையானவை:
சீரக சம்பா அரிசி – ஒரு கப்,
கசகசா – ஒரு டேபிள் ஸ்பூன்,
முந்திரி – 6,
வெங்காயம் – ஒன்று,
பச்சை மிளகாய் – 3,
கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று,
சீரகம் – கால் டீஸ்பூன்,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவை யான அளவு.
செய்முறை:
கசகசா, முந்திரியை ஊற வைத்து நைஸாக அரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும்.
பிறகு, அரைத்த கசகசா விழுது, உப்பு, ஒன்றரை கப் நீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியை சேர்த்து நன்றாக கிளறி, குக்கரை மூடி, ஆவி வந்ததும் வெயிட் போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். வெஜிடபிள் குருமாவோடு பரிமாறவும்.