ஆட்டுக்கறியை பொறுத்தவரை, நம்முடைய உடலுக்கு பலம் தரக்கூடியது.. உடல் சூட்டை தணிக்கக் கூடியது. தோலுக்கு வலிமை தருவதுடன், சருமத்துக்கான பளபளப்பையும் தரக்கூடியது.
மட்டன் சாப்பிடுவதால், நம்முடைய பார்வை கோளாறுகள் நீங்குவதுடன், கூர்மையான பார்வைகளுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம். இதில், ஆட்டின் நுரையீரல், கொழுப்புகளை நாம் சமைத்து சாப்பிடும் போது, உடலுக்கு வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை தருகிறது.
நம்முடைய நுரையீரல் மற்றும் இடுப்பு பகுதிக்கு நல்ல வலிமையை கூட்டுகிறது. ஆட்டின் கண்களை எடுத்து கொண்டால், நம்முடைய கண்களுக்கு மிகுந்த பலத்தை தந்து பார்வையை கூர்மைப்படுத்தும்.
ஆட்டின் நெஞ்சு பகுதியை சமைத்து சாப்பிடும் போது, நம்முடைய கபம் நீங்கும். மார்புக்கு பலத்தை தரக்கூடியது. அதனால் தான், பலவீன மானமாவர்கள் ஆட்டின் மார்பை, நெஞ்செலும்பாக வாங்கி சூப் வைத்து சாப்பிடுவார்கள்.
வைட்டமின் A, B, C உள்ளதால், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ஆட்டின் இதயம், மன ஆற்றலை பெருக்கக் கூடியது. ஆட்டு கால்களை சூப் வைத்து சாப்பிடும் போது, நம்முடைய கால்களுக்கு பலத்தை தருகிறது.
ஆட்டு மூளையில், கெட்ட கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு. இதிலுள்ள பாஸ்பரஸ், நம்முடைய கிட்னியில் உள்ள கசடுகளை நீக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. ஆடு இயற்கையாக உடலுக்கு குளிர்ச்சி வழங்கும் உணவை சேர்ந்தது.
அந்த வகையில், ஆட்டின் தலைக்கறியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலி தீரும். இதய கோளாறுகளை நீக்குவதில் தலைக்கறிக்கு முக்கிய இடம் உண்டு என்கிறார்கள்.
நூறு ரூபாயில் புற்று நோய்க்கான மருந்து !
வீட்டிற்கு திடீரென விருந்தினர்கள் வந்து விட்டால் அவர்களுக்கு மட்டன் பக்கோடா செய்து கொடுத்து அசத்தலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் - 200 கிராம்
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - தேவைக்கு
ரெடிமேட் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை :
மட்டனை சிறிய துண்டு களாக வெட்டி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு தாளிக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மட்டன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து
நன்கு வதக்கி,1 டம்ளர் தண்ணீர் சேர்த்து 6 விசில் போட்டு வேக விடவும். இதில் தண்ணீர் ஊற்றக் கூடாது. கறியில் இருக்கும் தண்ணீரே போது மானது. கறி வெந்தவுடன் அதில் தண்ணீர் இருந்தால் வடிகட்டி தனியே வைத்துக் கொள்ளவும்.
வெந்த மட்டனை ஒரு ஒரு பாத்திர த்தில் போட்டு அதனுடன் பஜ்ஜி போண்டா மிக்ஸ் கொஞ்சம் சேர்த்து பக்கோடா மாவு பதத்தில் பிசறிக் கொள்ளவும். தேவை யென்றால் மட்டன் வேக வைத்த தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மட்டனை அடுப்பை மிதமான தீயில் வைத்து உதிரியாக போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையான மட்டன் பக்கோடா ரெடி.
குறிப்பு :
அசைவ சமையல் மட்டன் பக்கோடா செய்ய எப்போதும் தீயை குறைவாக இருப்பது நல்லது..