நாஞ்சில் இறால் பிரியாணி செய்வது எப்படி?





நாஞ்சில் இறால் பிரியாணி செய்வது எப்படி?

உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது.  
நாஞ்சில் இறால் பிரியாணி செய்வது எப்படி?
இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. 

இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். புரதம், கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

இத்தனை சத்துக்கல் நிறைந்த இறால் கொண்டு நாஞ்சில் இறால் பிரியாணி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை : 

புதினா – ஒரு கொத்து 

எலுமிச்சை – ஒன்று பட்டை, 

ஏலக்காய், கிராம்பு – தலா இரண்டு 

மல்லித் தளை – கால் கட்டு 

தக்காளி – 4 உப்பு – தேவை யான அளவு 

பச்சை மிளகாய் – 5 

வெங்காயம் – 4 

மிளகாய் தூள் – 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் 

தேங்காய் எண்ணெய் – 150 கிராம் 

நெய் – 2 டேபிள் ஸ்பூன் 

பாஸ்மதி அரிசி – அரை கிலோ 

இறால் – 300 கிராம் உணவு 

செய்முறை : 
நாஞ்சில் இறால் பிரியாணி செய்வது எப்படி?
நாஞ்சில் இறால் பிரியாணி முதலில் எண்ணெயை காய வைத்து பட்டை, கிரம்பு, ஏலம் மற்றும் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் வைக்க வேண்டும். 

பிறகு கொத்து மல்லி புதினா, தக்காளி ,பச்சை மிளகாய் அனை த்தையும் போட்டு இரண்டு நிமிடம் சிம்மில் விட்டு, மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி தக்காளியை வேக விட வேண்டும். 

தக்காளி வெந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை போட்டு அரை எலுமிச்சை சாறு பிழிந்து சிம்மில் வைத்து வேக விடவும். 
இப்போது அரிசியை முக்கால் வேக்காடில் வேக விட்டு அதில் அரை தேக்கரண்டி எண்ணை, எலுமிச்சை சாறு சேர்த்து உடனே தாளித்து வைத்துள்ள கூட்டில் கொட்ட வேண்டும். 

கொட்டி தம்மில் விட வேண்டும் தம் போடுவதற் கென்றே உள்ள தட்டை வைத்து 

அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு வடித்த கஞ்சி சட்டியை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் விடவேண்டும்.
சிறிது கஞ்சி தண்ணீரில் சிகப்பு கலர் பொடியை கரைத்து மேலே தூவினால் போல ஊற்றி 

நெய்யையும் ஊற்றி மறுபடியும் மூடி போட்டு தம்மில் ஐந்து நிமிடம் சென்ற பின் இறக்கி விட வேண்டும். 

இப்போது சுவை யான நாஞ்சில் இறால் பிரியாணி தயார்.
Tags: