சுவையான நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி?





சுவையான நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி?

நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றும். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும். இதயத்துக்கும் நல்லது. நோய்த்தொற்றுகள் வராமல் காக்கும். 
சுவையான நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி?
நம் உடம்பில் வளர்சிதை மாற்றம் நிகழும் போது ஒவ்வொரு செல்லில் இருந்தும் கழிவுகள் வெளியேறும். இந்தக் கழிவுகள் வெளியேறவில்லை என்றால், உடலில் வீக்கம் ஏற்படுவதில் ஆரம்பித்து புற்றுநோய் வரை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. 
பெரிய நெல்லிக்காயில் உள்ள பாலிபினால், டேனின், ஃப்ளேவினாய்ட்ஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து மேலே சொன்ன பிரச்னைகள் வராமல் தடுப்பவை. 

குழந்தைகளுடைய வாட்டர் பாட்டிலில் ஒரு நெல்லிக்காயை கட் பண்ணிப் போட்டு, அதில் தண்ணீரை ஊற்றி விடலாம். நெல்லிக்காய் ஊறிய இந்தத் தண்ணீரைக் குடித்தாலே குழந்தைகளுக்குப் போதுமான வைட்டமின் `சி' கிடைத்து விடும். 

ஆனால், குழந்தைகளுக்கு மாலை 5 மணிக்கு மேல் நெல்லிக்காய் சாப்பிடக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

நெல்லிக்காய் சாறு ரத்தத்தில் சர்க்கரை அளவையும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும் என்பதால், இந்தப் பிரச்னைகளுக்கு மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள், 

ஓர் இயற்கை மருத்துவரிடம் தினசரி எத்தனை நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் என்பதைக் கேட்டு தெரிந்து கொண்டு அதன் பிறகு சாப்பிடலாம். சரி இனி சுவையான நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையானவை  :   

பெரிய நெல்லிக் காய் - 10, 

தேங்காய் - 1 துண்டு, 

பச்சை மிளகாய் - 4, 

புளிப்பில்லாத கெட்டித் தயிர் - 200 மி.லி., 

பெருங்காயத் தூள் - சிறிது. 
சிறுவயதில் வறுமை' மரபணுக்களில் தெரியும் !
தாளிக்க...

கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன், 

கறிவேப்பிலை - சிறிது. 

செய்முறை  : 

சுவையான நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி?
நெல்லிக் காயை கொட்டையை நீக்கி மிக்சியில் கரகரப்பாக அரைக்கவும். அதே போல் தேங்காய், பச்சை மிளகாயை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் அரைத்த விழுது, 
144 மற்றும் ஊரடங்கு உத்தரவு - ஒரு அலசல்
உப்பு, பெருங்காயத் தூள், தயிர் கலந்து தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கொட்டி கலக்கவும். சப்பாத்தி, ஆப்பம், தோசை யுடன் பரிமாறவும்.
Tags: