தேவையானவை:
புளி – எலுமிச்சை அளவு
பெரிய வெங்காயம் – அரை கிலோ
வெல்லம் – ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
வெந்தய பொடி - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – ஒன்றரை டீஸ்பூன்
உப்பு – தேவை யான அளவு
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
செய்முறை:
வெங்காய த்தை நீளமாக நறுக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து
எண்ணெய் விடாமல் புளியைச் சேர்த்து லேசாக வதக்கி ஆறியதும் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போன்று மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காய த்தைச் சேர்த்து பொன்னிற மாக வதக்கவும்.
இத்துடன் புளி பேஸ்ட், வெந்தயப் பொடி, பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து
மசாலா வசனை போகும் வரை வதக்கவும். எண்ணெய் சுருண்டு வந்ததும் பொடித்த வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்