வேர்க்கடலையைப் பல்வேறு ஊட்டச்சத்துக்களின் தொகுப்பு என்றே சொல்லலாம். அதிலும் காலை வெறும் வயிற்றில் ஊற வைத்த வேர்க்கடலையை சாப்பிட்டால் அன்றைய நாளுக்கான ஒட்டு மொத்த எனர்ஜியையும் அதிலிருந்து பெற முடியும்.
பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு உணவுப்பொருள்.இதய நோய் உள்ளவர்கள், கொலஸ்டிரால் உள்ளவர்கள் கூட முழுமையாக வேர்க்கடலையை தவிர்க்க வேண்டும் என்று அவசியம் கிடையாது.
மிதமான அளவில் வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம். நீரழிவு பிரச்சினை இருப்பவர்கள், உயர்ரத்த அழுத்தம் இருப்பவர்கள் வேர்க்கடலையை முற்றிலும் தவிர்ப்பார்கள். ஆனால் இதில் உடலுக்கு நன்மை செய்யும் நல்ல கொழுப்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது.
வறுத்த வேர்க்கடலையைத் தவிர்த்து விட்டு பச்சை வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம். அது அதிக கலோரிகள் எடுத்துக் கொள்வதைத் தடுத்து வயிறு நிரம்பிய உணர்வையும் தரும்.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்குத் தேவையான அடிப்படையான ஊட்டச்சத்துக்களான மக்னீசியம், காப்பர், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் பச்சை வேர்க்கடலையில் மிக அதிகமாகவே இருக்கின்றன.
அதோடு பச்சை வேர்க்கடலையில் ஏராளமான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருப்பதால் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்து, இதயத்தைப் பலப்படுத்துகிறது.
தூங்கி எழும் போது பேக் பெயின் இருக்கா? – காரணம் இது தான் !
தேவையான பொருட்கள்:
வறுத்த வேர்க்கடலை – ஒரு கப்
முந்திரி பருப்பு – அரை கப்
பிரட் துண்டுகள் – 2 கப்
பால் – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிதளவு
உப்பு – தேவை யான அளவு
பொரிப் பதற்கு எண்ணை – 400 கிராம்
செய்முறை:
வேர்க்கடலை, முந்திரி பருப்பு, வெங்காயம், மிளகாய், இஞ்சி, எல்லாவ ற்றையும் மிக்சியில் கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
பிரட் துண்டுகளை உதிர்த்து, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து, பால் விட்டு கெட்டியாகப் பிசையவும். தேவையான உப்பைக் கடைசியாகச் சேர்த்து நன்கு கலக்கவும்.
கடாயில் எண்ணை ஊற்றி நன்கு காய்ந்ததும், செய்து வைத்தி ருக்கும் கலவையை போண்டாக் களாக கிள்ளி எண்ணையில் போடவும். நன்கு சிவந்து மொறு, மொறுப் பானதும் வடிகட்டியில் போடவும்.
ஒருதட்டில் வைத்து சூடாகப் பரி மாறவும்.
குறிப்பு:
கடலை மாவு சேர்க்காத லால் குழந்தைகள், பெரிய வர்கள் என எல்லாரு க்குமே கொடுக்கலாம்.