உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்வது எப்படி?





உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு அதிக அளவில் உண்பதால் அதிக ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்வது எப்படி?
இன்றைய நவீன காலத்தில் வேகமாக இயங்கி வரும் வாழ்க்கை முறைக்கு மத்தியில் அனைவரும் துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர். அதில் கிழங்குகளின் ராஜா என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு மிக முக்கிய இடம் உண்டு.
உருளைக்கிழங்கை பலவிதமான உணவு வகைகளுடன் சேர்த்து சமைக்க முடியும். உருளை கிழங்கை பலவிதமாவும் நம்மால் சமைக்க முடியும். 

முக்கியமாக தற்போது நடைமுறையில் இருக்கும் உருளை கிழன்கினால் செய்யப்பட்ட நொறுக்கு தீனிகள் பலதும் மக்களால் விரும்பி உண்ணபடுகிற்து. 

உருளைக்கிழங்கில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் உடலுக்கு அதிக நன்மையை செய்கின்றனர். நீங்கள் உருளைக்கிழங்கை அதிக அளவில் உட்கொண்டால், கவனமாக இருங்கள், ஏனென்றால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.

உருளைக்கிழங்கில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் கீல்வாதத்தின் வலியை அதிகரிக்கச் செய்யும், எனவே கீல்வாத நோயாளிகள் உருளைக்கிழங்கை அதிகம் உட்கொள்ளக்கூடாது.

நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். அதாவது, இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க, நீங்கள் உருளைக் கிழங்கிலிருந்து விலகி இருந்தால் நல்லது.

உருளைக்கிழங்கை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும் என்பதை மிகச் சிலரே அறிவார்கள். அதாவது, பிபி நோயாளிகள் உருளைக்கிழங்கை அதிகம் உட்கொள்ளக் கூடாது.
உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது, இதன் காரணமாக அதிகப்படியான அளவு கலோரிகளை அதிகரிக்கும், இது உடல் பருமனை ஏற்படுத்தும்.

இவை உடலில் உள்ள செல்கள் சிதைவடைவதை வெகுவாக குறைத்து, செல்களின் நீண்ட நாள் வாழ்க்கைக்கு உதவுகிறது. இதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன் இளமையான தோற்றமும் நமக்கு கிடைக்கிறது.
தேவையானவை  :

உருளைக்கிழங்கு – 4 

வெங்காயம் – 2 

பச்சை மிளகாய் - 3 

துருவிய தேங்காய் – ½ கப் 

கடுகு – 1 தேக்கரண்டி 

சீரகம் – 1 தேக்கரண்டி 

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி 

கடலை பருப்பு – 1 தேக்கரண்டி 

பெருங்காயம் – ¼ தேக்கரண்டி 

உப்பு – தேவையான அளவு 

கறிவேப்பிலை – சிறிது 

எண்ணெய் 1 டீஸ்பூன் 

செய்முறை  :

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்த பின் சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 
பின்னர் தேங்காய் சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். இப்போது வேக வைத்த உருளைக் கிழங்கு சேர்த்து நன்கு கிளறவும். உருளைக் கிழங்கு பொடிமாஸ் தயார்.