பஞ்சாபி சிக்கன் மசாலா செய்வது எப்படி?





பஞ்சாபி சிக்கன் மசாலா செய்வது எப்படி?

பஞ்சாபி ரெசிபிக்கள் பெரும்பாலும் காரமாகவும், சுவையானதாகவும் இருக்கும். அதிலும் சிக்கன் ரெசிபிக்களை பற்றி சொல்லவே வேண்டாம். சுவை ஆள மயக்கும். 

அதிலும் பட்டர் சிக்கன், பாட்டியாலா சிக்கன், கடாய் சிக்கன் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அந்த வகையில் இப்போது பஞ்சாபி ஸ்டைல் சிக்கன் மசாலாவை எப்படி செய்வதென்று இந்த பதிவில் நாம் காண்போம். 
இந்த டிஷ் உண்மையில் மிகவும் எளிமையானது. மேலும் இது மழைக் காலங்களில் வீட்டில் செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். சரி, இப்போது அந்த பஞ்சாபி சிக்கன் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையானவை: 
சிக்கன் - 500 கிராம், 

வெங்காயம் - 2, 

இஞ்சி - சிறிய துண்டு, 

பூண்டு - ஒன்று, 

தக்காளி - 2, 

சீரகம் - ஒரு டேபிள் ஸ்பூன், 

பட்டை, லவங்கம் - தலா 2, 

மல்லித் தூள் - 2 டீஸ்பூன், 

தனி மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன், 

முந்திரிப் பருப்பு - 10, 

தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன், 

வெண்ணெய் - கால் கப், 

தயிர் - அரை கப், 

சர்க்கரை - ஒரு டீஸ்பூன், 

புதினா, கொத்த மல்லி - சிறிதளவு, 

உப்பு - தேவையான அளவு. 
வெயில் கால தலைவலிக்கு காரணங்கள் !
செய்முறை: 
பஞ்சாபி சிக்கன் மசாலா

வெங்காயம், தக்காளி, இஞ்சியை நறுக்கிக் கொள்ளவும். முந்திரிப் பருப்பை அரைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து சிக்கன் துண்டு களோடு ஊற வைக்கவும். 

தேங்காய்த் துருவலை தனியாக அரைக்கவும். தனி மிளகாய்த் தூள், மல்லித் தூள், சீரகம், பாதியளவு வெங்காயம் ஆகிய வற்றைச் சேர்த்து நைஸாக அரைக் கவும். 

பூண்டை தனியாக அரைத்து தயிரில் கலக்கவும். குக்கரில் வெண்ணெய் விட்டு, உருகியதும் சர்க்கரை சேர்த்து பட்டை, லவங்கம் தாளித்து, மீதியுள்ள வெங்காய த்தை சேர்த்து வதக்கி, இஞ்சி, தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். 
விண்வெளி பயணம் உயிருக்கு ஆபத்தானதா?
பிறகு, அரைத்த தேங்காய் விழுது, பூண்டு விழுது, வெங்காய மசாலா விழுது சேர்க்கவும். இதனுடன் ஊறிய சிக்கன் துண்டுகள், தேவையான உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி, 2 விசில் வந்ததும் இறக்கவும். 

புதினா, கொத்த மல்லியை மேலே தூவி... சாதம், நாண், ரொட்டி யுடன் பரிமாறவும்.
Tags: