தக்காளி - தேங்காய் பால் புலாவ் செய்வது எப்படி?





தக்காளி - தேங்காய் பால் புலாவ் செய்வது எப்படி?

எலும்புகளை பலப்படுத்தி, சரும நோய்களை தீர்த்து, இரத்த சோகையை விரட்டும் தேங்காய் பால். உடலில் மாங்கனீசு குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும். 
தக்காளி - தேங்காய் பால் புலாவ்
ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது. தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. 

குறிப்பாக உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டச்சத்தாக விளங்குகிறது. அதிலும் பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். 
போதுமான இரும்புச்சத்து உடம்பில் இல்லாததால், உலகத்தில் உள்ள பலருக்கும் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது. இரும்புச் சத்து குறைபாடு இருப்பதால்,  உடலானது ஹீமோகுளோபின் அதிகரிப்பதை தடுத்து நிறுத்தும். 

இதனால் இரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல், இரத்த சோகையை  உண்டாக்கும். ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்து விடுகிறது.

தக்காளி புலாவ் செய்யும் போது அதில் தேங்காய் பால் சேர்த்து செய்தால் அருமை யாக இருக்கும். இன்று புலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி - ஒரு கப்,

வெங்காயம் - 1,

தக்காளி - 3,

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்,

பச்சை மிளகாய் - 2,

புதினா - ஒரு கைப்பிடி,

கொத்த மல்லித் தழை - ஒரு கைப்பிடி,

மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், 

தேங்காய்பால் - அரை கப், 

உப்பு - தேவையான அளவு. தாளிக்க:

நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்,

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2.
குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள் என்ன?
செய்முறை :
வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். தக்காளியைப் பொடி யாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். அரிசியை நன்றாக கழுவி தேங்காய் பாலுடன், ஒன்றே கால் கப் தண்ணீர் சேர்த்து ஊற வையுங்கள்.

எண்ணெய், நெய் காய வைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், சிட்டிகை உப்பு சேர்த்து, நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 

தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், புதினா, கொத்து மல்லி சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு, ஊற வைத்த அரிசியை தண்ணீர், தேங்காய் பால் கலவை யோடு சேர்த்து ஊற்றுங்கள். 
குடிப்பழக்கத்தால் ஏற்படும் மூளைக் கோளாறுகள் !
மேலும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்குங்கள். விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து சிறிது நெய் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும். 

 அருமை யான தக்காளி - தேங்காய் பால் புலாவ் ரெடி.
Tags: