உடல் எடை குறைப்பவர்களுக்கு பாலக்கீரை ஒரு வரப்பிரசாதம். இதிலுள்ள உள்ள கரோட்டினாய்டு என்ற லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக் கொண்டவை.
இதனை உணவில் சேர்க்கும் போது, கெட்ட கொலஸ்ட்ரால் நம் உடலில் தங்குவதை தவிர்க்கலாம். தினமும் டயட்டில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இதில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்கிறது. குழந்தைகளுக்கும் வலு சேர்க்கிறது. அதிக அளவு பொட்டாசியமும் உள்ளது.
உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இந்த கீரையை தான் பரிந்துரைக்கிறார்கள். இதில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபொலிக் சத்து உள்ளதால், மார்பக புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது.
மேலும் பசலை கீரையில் நிறைவான ப்ளவனாய்டு நிரம்பி யிருப்பதால், புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது.
நிறைய ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள கீரை என்பதால், இதை உணவில் தவிர்க்கவே கூடாது. குழந்தைகளுக்கு உணவில் இதை அடிக்கடி சேர்த்து தர வேண்டுமாம்.
சுண்ணாம்பு சத்தும், வைட்டமின் K சத்தும், அதிகம் உள்ளதால், எலும்புகளையும் பற்களையும் வலிமைபடுத்த செய்கிறது.
வளரும் குழந்தைகளுக்கு இந்த பசலைக் கீரையை காரம் அவ்வளவாக இல்லாத குழம்பாகவோ, அல்லது சூப் போன்றோ தந்தால், எலும்பும், பற்களும் உறுதிப்படும்.
சரி இனி பசலைக்கீரை உருளைக்கிழங்கு பயன்படுத்தி ருசியான ஆலு பாலக் கட்லெட் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானவை:
பசலைக்கீரை – ஒரு சிறு கட்டு,
உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்),
பிரெட் ஸ்லைஸ்கள் – 4,
பச்சை மிளகாய் – இஞ்சி அரைத்த விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்,
பிரெட் தூள் – சிறிதளவு,
மைதா மாவு – அரை கப்,
சீஸ் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
ஜீரோ எனர்ஜி வீடு என்றால் என்ன?
செய்முறை:
கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி 2 கப் கொதி நீரில் 2 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி, ஆறியதும் மிக்ஸியில் அரைத் தெடுக்கவும். மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த பிரெட் ஸ்லைஸ்கள், கீரை விழுது,
பச்சை மிளகாய் – இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்றை அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும்.
கலவையை ஊற்றும் போது நன்றாக கவனியுங்க !
தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித் தெடுத்து… டொமெட்டோ சாஸுடன் பரி மாறவும்.